Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பேபி உருளைக்கிழங்கில் வறுவல் செஞ்சுருக்கீங்களா? லஞ்சுக்கு சூப்பரா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க..!
பேபி உருளைக்கிழங்கு எல்லா சீசனிலும் கிடைக்கும். இந்த பேபி உருளைக்கிழங்கு நமது இந்திய உணவுகள் பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண உருளைக்கிழங்கை விட இந்த பேபி உருளைக்கிழங்கு சுவை வித்தியாசமானது. அதனாலேயே குழந்தைகளுக்கு இந்த உருளைகிழங்கு ரெம்பவே பிடிக்கும்.. அதனால் இந்த உருளைகிழங்கை உங்க மதிய உணவுடன் சேர்த்து சமைத்துக் கொடுங்கள்.. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என எல்லாத்துக்கும் ஒரு நல்ல சைடிஷாக இருக்கும்..
குறிப்பாக பேபி உருளைக்கிழங்கை தோலுரிக்காமல் சமைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் இந்த சிறிய உருளைக்கிழங்கை வறுத்து மிருதுவாகவும் காரமாகவும் செய்தால், அது மிகவும் சுவையாக இருக்கும். பேபி உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி பல உணவுகளை தயாரிக்கலாம். ஆனால் இந்த பதிவில் டேஸ்டியான வறுவலாக செய்வது எப்படி? என்பது பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:
பேபி உருளைக்கிழங்கு - 10
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 2
தக்காளி - 1
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - ½ டீஸ்பூன்
செய்முறை :
1. முதலில் உருளைக்கிழங்கை சுத்தமாக கழுவி தனியாக எடுத்து வைக்கவும்.
2. பிறகு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் பேபி உருளைக்கிழங்கை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்... இல்லையெனில் எண்ணெய் மேலே தெறிக்கும்...
3. தன பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் பொன்னிறமாகும் வரை வறுக்க பேபி உருளைகிழங்கை வறுக்க வேண்டும்..
4. இதற்கிடையில், வெங்காயத்தை பேஸ்ட் செய்யவும். மேலும் தக்காளியையும் தனியாக அரைத்து எடுத்து இந்த பேஸ்ட்டையும் தனியாக வைக்கவும்.
5. பேபி உருளைக்கிழங்கு வெந்த பிறகு, உருளைக்கிழங்கை எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைக்க வேண்டும்..
6. அதே கடாயில் மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடு ஆறிய பின் சீரகத்தூள் சேர்த்து வதக்கி வெங்காய விழுதை சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கவும். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
7. இரண்டு நிமிடம் வதக்கிய பிறகு அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.. இப்போது தக்காளி விழுது சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
8. முழு கலவையையும் கலந்து நன்றாக வறுப்பட வேண்டும். அதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து கலக்க வேண்டும்.. பின்பு முன்பு வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அத்துடன் சேர்த்து கலந்து வதக்கவும்.
9. இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளால் பேபி உருளைகிழங்கு ஃப்ரையை அலங்கரித்து பரிமாறலாம்..
10. கண்டிப்பாக இந்த சைடிஷை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்..



Click it and Unblock the Notifications