Latest Updates
-
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும் -
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க..
மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி?
மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.. அதனால் இந்த சண்டெக்கு இந்த மட்டன் கறி கோலா உருண்டைக் குழம்பை செய்து அசத்துங்கள்..
பெண்களுக்கு இரத்த சோகை கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கருவுற்ற தாய்மார்கள் மட்டனை சாப்பிட்டால் அதில் உள்ள இரும்பு சத்து ஹீமோ குளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வது என்றும் அதற்கு என்னென்ன? பெருட்கள் தேவைப்படும் என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

தேவையான பொருள்கள்
1. கொத்திய ஆட்டுக்கறி
2. பெரிய வெங்காயம்
3. மஞ்சள் தூள்
4. சோம்புத் தூள்
5. பொட்டுக்கடலை மாவு
6. முட்டை
7. பச்சை மிளகாய்
8. பூண்டு
9. உப்பு
10. எண்ணெய்
11. பெரிய வெங்காயம்
12. இஞ்சிப் பூண்டு விழுது
13. பெரிய தக்காளி
14. சாம்பார் மிளகாய்த் தூள்
15. எலுமிச்சை சாறு
16. பச்சை மிளகாய்
17. மஞ்சள் தூள்
18. புதினா இலை
19. தேங்காய்ப் பால்
20. கொத்தமல்லி இலை
21. கிராம்பு
22. பட்டை
23. பிரியாணி இலை
24. ஏலக்காய்
செய்முறை:
1. முதலில் உருண்டையை தயார் செய்து கொள்ள, நன்கு கொத்திய ஆட்டுக் கறியை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
2. பச்சை மிளகாயை நீளம், நீளமாக கீறி வைத்துக் கொள்ளவும்.
3. இப்பொழுது வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகிய இவை அனைத்தையும் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
4. அடுத்ததாக ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி காய விடவும்.
5. எண்ணெய் நன்கு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் மிளகாய்த் தூள், சிட்டிகை மஞ்சள் தூள் என அனைத்தையும் போட்டு கறியில் தண்ணீர் வற்றும் வரையில் வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.
6. இப்போது நன்கு ஆறிய மாத்திரத்தில் மேற்கண்டவற்றுடன் பொட்டுக்கடலை மாவு, சோம்புத் தூள், மற்றும் முட்டையை உடைத்துச் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளவும்.
7. பின்னர் ஒரு கனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மேலே பிடித்த உருண்டைகளை அதில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
8. பின்னர் குழம்புக்கு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்துமல்லித் தழை என அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்..
9. பின் ஒரு வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய் என அனைத்தையும் போட்டு நன்கு தாளித்து இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரையில் நன்கு வதக்கவும்.
10. பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித் தழை என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்கு வதக்கவும். மேற்கண்ட அனைத்தும் நன்கு வதங்கிய பின்னர் தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
11. இப்போது தேவைப்பட்டால், தேவையான அளவு உப்பை போட்டு நன்கு கொதிக்க விடவும்.
12. குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும், பொறித்து வைத்து உள்ள உருண்டைகளைப் போட்டு மேலும், ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
13. இதோ சுவையான கறி உருண்டைக் குழம்பு தயார்.
குறிப்பு: தேவைப்பட்டால் குழம்பு கூட்டும்போது மட்டன் எலும்புகள் இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள்.. சுவை அலாதியாக இருக்கும்..



Click it and Unblock the Notifications