Latest Updates
-
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..
மணக்கும் மட்டன் சாப்ஸ்.. இதோ ரெசிபி..!
மட்டன் சாப்ஸ் கறி எலும்புகளுடன் கூடிய ஆட்டிறைச்சியால் செய்யப்படுகிறது.. இந்த ரெசிபிக்கு மட்டன் துண்டுகள் பெரிய துண்டுகளாக வெட்டப்படுகின்றன. அப்போதுதான் சாப்ஸ் செய்ய நன்றாக இருக்கும்.. இந்த மட்டன் சாப்ஸ் குறிப்பாக சப்பாத்தி, சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், பரோட்டா அல்லது நீங்கள் விரும்பும் எதையும் கொண்டு சாப்பிடலாம்.. இது மிகவும் சுவையாக இருக்கும்.
பல இறைச்சி உண்பவர்களுக்கு, கோழியை விட ஆட்டிறைச்சி, குறிப்பாக சாப்ஸில் அதிக நன்மைகள் உள்ளன என்பது தெரியாது. மட்டன் சாப்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் மட்டன் சாப்ஸை செய்வது எப்படி? என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

ஆடு சாப்ஸில் கோழியை விட குறைவான கலோரிகள், குறைந்த கொழுப்பு மற்றும் சற்று அதிக புரதம் உள்ளது. அதிக இரும்பு மற்றும் பொட்டாசியம் உள்ளது.. கோழியை விட குறைவான சோடியம் உள்ளது.. அதனால் இந்த மட்டன் சாப்பஸை மறக்காமல் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் கொடுங்கள்.. எந்த இறைச்சியை அடிக்கடி சாப்பிடுவது நல்லது மற்றும் எப்போதாவது சாப்பிடுவது நல்லது என்பதை அறிவது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கிய பகுதியாகும். நீங்கள் சரியான வெட்டுக்களைத் தேர்ந்தெடுத்து சரியான தேர்வுகளைச் செய்தால் இறைச்சி உடலுக்கு நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருக்கும்.
தேவையான பொருள்கள்
1. சாப்ஸ் மட்டன்
2. தேங்காய்
3. பச்சை மிளகாய்
4. தனியாத் தூள்
5. தக்காளி
6. பட்டை
7. லவங்கம்
8. ஏலக்காய்
9. மஞ்சள் தூள்
10. சின்ன வெங்காயம்
11. சோம்பு
12. சீரகம்
13. மிளகு
14. இஞ்சி, பூண்டு விழுது
15. உப்பு
16. எண்ணெய்
செய்முறை
1. முதலில் மட்டனை சுத்தம் செய்து நன்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும்..
2. தேங்காயையும், சோம்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்..
3. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைத்துக் கொள்ள வேண்டும்..
4. எண்ணெய் நன்கு காய்ந்த மாத்திரத்தில் நறுக்கிய சாம்பார் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகிய இவை அனைத்தையும் அடுத்தடுத்து சேர்த்து நன்கு வதக்கவும்.
5. இப்போது மேற்கண்டவற்றுடன் முன்பு சுத்தம் செய்த மட்டன், தேவையான அளவு உப்பு, தனியாத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி- பூண்டு விழுது என அனைத்தையும் சேர்க்கவும். உடன் அரைத்த தேங்காயை ஊற்றிக் கிளறி, சாப்ஸை நன்கு சுண்ட விடவும்.
6. பின்னர் பொடித்த சீரகம், மிளகு என அனைத்தையும் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி இறக்கவும்.
7. இதோ சுவை மிகுந்த மட்டன் சாப்ஸ் சுடச் சுட ரெடி.
மட்டனில் இருக்கும் கனிமச் சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் இதர பொருட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications
