Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
ஏனோகி காளான் செஞ்சு சாப்பிட்டுருக்கீங்களா? மட்டனே தோத்து போகும்..செம்ம ருசியாக இருக்கும்!ட்ரை பண்ணி பாருங்கள்!
நம்மில் பெரும்பாலானோர் காலையில் ஒரே மாதிரியே சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். வழக்கமாக இட்லி, தோசை, பூரி என சாப்பிடுவதைதான் பழகி இருக்கிறோம்.. ஆனால் இப்போது உள்ள குழந்தைகள் விதவிதமாக சாப்பிட ஆசைப்படுகின்றனர்.. அதனால் அவர்களுக்கான ஒரு சூப்பரான சத்தான காலை உணவை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..
தற்போது குளிர் காலம் தொடங்க உள்ள நிலையில், காளான் சாப்பிட்டால் நல்லது என்கின்றனர் சுகாதார வல்லுநர்கள்.. அத்துடன் முட்டை சேர்த்து சமைத்தால் சுவை செம்மையாக இருக்கும்.. முட்டை என்றால் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு.. அதில் தற்போது வரை பலரும் வெங்காயத்துடன் மசாலா ஆம்லெட், உருளைக்கிழங்கு ஆம்லெட் அல்லது சிக்கன் ஆம்லெட் போன்றவைதான் செய்து வருகின்றனர்.. ஆனால் ஆம்லெட் ரெசிபிகளில் இன்னும் பல வகைகள் உள்ளன. இந்த வரிசையில் இந்த புதிய ரெசிபியை ட்ரை பண்னி பாருங்கள்..

ஆம் காளான் ஆம்லெட் பற்றி தான் சொல்கிறோம்.. அதிலும் ஏனோகி காளானில் ஆம்லெட் செய்தால் மட்டன் சாப்பிட்ட சுவை கிடைக்கும்.. இந்த ஏனோகி காளான் ஆம்லெட்டை எப்படி செய்வது? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
தேவையான பொருட்கள்
1. ஏனோகி காளான் - 1 பேக்
2. முட்டை - 3
3. சின்ன வெங்காயம் - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
4. சோயா சாஸ் - அரை டீஸ்பூன்
5. உப்பு - தேவையான அளவு
6. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை
1. முதலில் ஒரு ஏனோகி காளானை எடுத்து அதன் நுனியை துண்டிக்கவும். இந்த காளான்கள் கொத்து கொத்தாக இருக்கும்.. அதனால் அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீரில் நிரப்பவும். பின் ஏனோகி காளானை பிரித்து சிறிது உப்பு தூவி பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும்.
2. பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
3. அதன் பிறகு ஸ்பிரிங் ஆனியன் பொடி, வெங்காயம், உப்பு, சோயா சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
4. பின்னர் அடுப்பில் சட்டியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஏனோக்கி காளானை தனியே ஒரு பாத்திரத்தில் போட்டு வட்ட வடிவில் பூவைப் போல் அடுக்கவும்.
5. பிறகு சிறிது எண்ணெய் தடவவும். காளானில் இருந்து தண்ணீர் வெளியேறி காளான்கள் சிறிது சிவக்க ஆரம்பித்ததும் முட்டை கலவையை மேலே ஊற்றி சிறிது எண்ணெய் சேர்க்கவும்.
6. முட்டை வெந்தது போல் வந்ததும் ஆம்லெட்டை திருப்பி போட்டு வேக வைக்கவும். சுவையான ஏனோகி காளான் ஆம்லெட் தயார். இந்த காளான் ஆம்லெட்டை குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும், இதில் பல நல்ல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
ஏனோகி காளானின் நன்மைகள்..
1. காளான்களில் பல வகைகள் உள்ளன. காளான்கள் இறைச்சி போன்ற அற்புதமான சுவை கொண்டவை. அதிலும் ஏனோகி காளான் சாப்பிட மட்டன் சாப்பிடுவதை போலவே இருக்கும்..
2. இந்தியாவில் உள்ள பிரபலமான காளான் வகைகளில் இதுவும் ஒன்று. இவற்றின் தனித்துவமான அழகியல் தோற்றம் காரணமாக இவை கோல்டன் ஊசி காளான்கள் அல்லது லில்லி காளான்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
3. இலையுதிர் மற்றும் வசந்த காலங்களில் இயற்கையாக மரத்தின் தண்டுகளில் இது வளர்க்கப்படுகிறது. இவை நீண்ட மெல்லிய தண்டு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இவற்றின் நுனியில் சிறிய வட்டமான தொப்பி உள்ளது.
4. இவற்றின் வேர்கள் அல்லது ஹைபாக்கள் வலுவாக இணைக்கப்பட்டுள்ளன. மற்றும் தண்டுகள் இணைக்கப்பட்ட பகுதியிலிருந்து வளர்ந்து 4 முதல் 5 அங்குலங்கள் வரை நீளமாக இருக்கும். இவை நுட்பமான சுவை மற்றும் மொறு மொறுப்பான அமைப்பைக் கொண்டுள்ளன.
5. நார்ச்சத்து, வைட்டமின்கள் (B1, B3, B5, B6 மற்றும் D), பொட்டாசியம், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களின் முழு சத்தையும் கொண்டுள்ளது.. கலோரிகள், கொழுப்புகள் குறைவாக உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், அழற்சி எதிர்ப்பு பண்புகள் இவற்றில் அதிகமாக உள்ளன.



Click it and Unblock the Notifications
