Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சப்பாத்திக்கு ஒருமுறை முட்டையை இந்த ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. அல்டிமேட்டா இருக்கும்..
Egg Tawa Masala Recipe In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருப்பதால், இரவு சப்பாத்திக்கு பலரும் முட்டை சைடு டிஷ்ஷை செய்து சாப்பிட நினைப்பார்கள். உங்களுக்கும் அப்படி தான் இருக்குமா? அப்படியானால் அடுத்தமுறை சப்பாத்திக்கு முட்டை சைடு டிஷ் செய்வதாக இருந்தால், வழக்கமாக செய்யும் முட்டை சைடு டிஷ்ஷை செய்யாமல், ஒருமுறை முட்டை தவா மசாலாவை செய்யுங்கள்.
இந்த முட்டை தவா மசாலா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை ட்ரை செய்யலாம்.

உங்களுக்கு முட்டை தவா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை தவா மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ப்ரை செய்வதற்கு...
* முட்டை - 5
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சிறிது
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* கொத்தமல்லி - 1 கப்
* தக்காளி - 2
* பச்சை மிளகாய் - 2
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில்
முட்டைகளை போட்டு, சிறிது உப்பு சேர்த்து, 10 நிமிடம் முட்டையை வேக
வைத்து இறக்கி, குளிர்ந்ததும் அதன் ஓட்டை நீக்கிவிட்டு, இரண்டு
துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் கொத்தமல்லி, தக்காளி மற்றும் பச்சை மிளகாய்
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
அதில் வேக வைத்த முட்டைகளை வைத்து, அதில் உப்பு, காஷ்மீரி மிளகாய்
தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து ப்ரை செய்து தனியாக ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அரைத்து
வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் குழம்பு மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, ப்ரை செய்து வைத்துள்ள
முட்டைகளை சேர்த்து பிரட்டி, 2 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லியைத்
தூவி இறக்கினால், சுவையான முட்டை தவா மசாலா தயார்.



Click it and Unblock the Notifications