Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
உங்க குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்ல இதை வையுங்கள்..! கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க..!
தினமும் காலையில் அம்மாக்களுக்கு மிக பெரிய டாஸ்க் இருக்கும்.. அது என்ன தெரியுமா? குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்ல என்ன வைக்கிறது என்றுதான்.. அந்த ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்ல வைக்கிற உணவு சத்தாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.. அதே சமயத்தில் குழந்தைகளுக்கும் பிடித்தவையாகவும் இருக்க வேண்டும்.. அவர்கள் அதை மிச்சம் வைக்காம சாப்பிட்டு வர வேண்டும்.. என பலவிதமாக யோசிச்சு அம்மாக்கள் லஞ்ச் ரெடி பண்ணுவாங்க..
ஆம், அந்த மாதிரியான ஆரோக்கியமாகவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபியைதான் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ள போகிறோம்.. வெஜிடெபிள் புலாவ்.. அதில் அதிகமான விட்டமின்கள் நிறைந்த காய்கறிகளும் நெய்யும் சேக்கப்படுகிறது.. அதனால் அனைத்து தாய்மார்களும் இந்த ரெசிபியை வாரம் ஒருமுறையாவது குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்ல வைக்க செஞ்சு கொடுக்கலாம்..

தேவையான பொருள்கள்
1. அரிசி
2. காரட்
3. இஞ்சி
4. கசகசா
5. சீரகம்
6. கரம் மசாலாப் பவுடர்
7. மிளகாய்ப் பொடி
8. நெய்
9. பட்டாணி
10. உருளைக் கிழங்கு
11. வெங்காயம்
12. பச்சை மிளகாய்
13. காலிப்ளவர்
14. தேங்காய்
15. கொத்து மல்லி
16. எண்ணெய்
செய்முறை
1. பட்டாணி, காரட், காலிப்ளவர், உருளைக் கிழங்கு இவற்றை சிறிது பெரிய துண்டுகளாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, கொஞ்சம் தண்ணீர் விட வேண்டும்.
2. இப்போது அடுப்பை சிறிது தணிய வைக்க வேண்டும்..
3. காய் கறிகள் பாதி வெந்தவுடன் மிளகாய்ப் பொடி போட்டு, உப்பு வேண்டிய அளவு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி இவற்றைப் போடவும்.
4. முக்கால் அளவுக்கு வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கித் தண்ணீரை ஓட்ட வடித்து விட வேண்டும்.
5. இப்போது அரிசியைச் சிறிது நெய்யில் வறுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு உடன் உப்பு போட்டு வேக வைத்து சாதம் ரெடி தயார் செய்ய வேண்டும்.
6. நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு மூடி தேங்காய்த் துருவல், இஞ்சி, கசகசா, சீரகம் இவற்றை எல்லாம் பச்சையாக தண்ணீர் விடாமல் மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
7. இன்னொரு வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி, நெய்யில் நன்றாக வதக்கி, அதனுடன் வேக வைத்த காய்கள், சாதம், அரைத்த மசாலா உட்பட எல்லாவற்றையும் போட்டுக் கிளறி, அரை ஸ்பூன் கரம் மசாலாப் பவுடரை போட்டு இரண்டு நிமிடங்கள் அடுப்பில் வைத்துக் கிளறி இறக்கி வைத்துப் பச்சை கொத்தமல்லியைப் போடவும்.
8. இப்போது சுவையான சத்தான லஞ்ச் பாக்ஸ் வெஜ் புலாவ் ரெடி..
பொதுவாக புலாவ் போன்றவற்றில் அதிகமான காய் கறிகளை சேர்த்து அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் உடல் ரீதியாக பல நன்மைகளை தரும்.



Click it and Unblock the Notifications