Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
சுகரை குறைக்கும் இந்த கம்பு பணியாரத்தை வீட்டில் ட்ரை பண்ணுங்க.. இதோ ரெசிபி..!
பணியாரம் என்பது சூப்பரான, ருசியான, ஆரோக்கியமான மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகும்.. இதை தென் மாவட்ட மக்கள் இன்றும் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.. அதிலும் பல வகையான பணியாரங்கள் உள்ளன.. அவை காரப்பணியாரம், ஸ்வீட் பணியாரம், முட்டை பணியாரம் என பலவிதமான லிஸ்ட் உள்ளன.. ஆனால அவற்றில் சிறந்த ஆரோக்கியமான பணியாரம்தான் இந்த கம்பு பணியாரம்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்..
முக்கியமாக சுகர் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை குறைக்கும் அல்லது கட்டுக்குள் கொண்டு வரும்.. எண்ணற்ற வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்து காணப்படும் இந்த கம்பு சுவையான பணியாரத்தை மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

தேவையான பொருள்கள்
1. பச்சரிசி
2. கம்பு
3. இட்லி அரிசி
4. உளுந்து
5. பெருங்காயம்
6. பச்சை மிளகாய்
7. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
8. வெந்தயம்
9. கடுகு
10. கடலைப் பருப்பு
11. எண்ணெய்
12. சீரகம்
செய்முறை
1. முதலில் பச்சரிசி, இட்லி அரிசி, கம்பு, உளுந்து, வெந்தயம் ஆகிய இவை அனைத்தையும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரையில் ஊற வைக்க வேண்டும்.
2. பின்னர் ஊறவைத்தக் கலவையை சுமார் 8 மணி நேரம் நன்கு புளிக்கவிடவும்.
3. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கடுகு, கடலைப் பருப்பு, சீரகம் ஆகிய இவை அனைத்தையும் தாளித்துக் கொண்டு அதனை மேற்கண்ட மாவுடன் கலக்க வேண்டும்..
4. பின்னர் பணியாரச் சட்டியில் அந்த அரைத்த மாவை ஊற்றி தேவையான அளவு எண்ணெய் விட்டு இரண்டு, மூன்று முறை திருப்பிப் போட்டு முறுகலாக வாட்டி எடுக்கவும்.
5. இதோ இப்போது சுவையான கம்புப் பணியாரம் தயார்.
6. இதில் தேவைப்பட்டால் கொஞ்சம் வெள்ளம் சேர்த்து கம்பு இனிப்பு பணியாரம் சுட்டு எடுக்கலாம்..
கம்பின் நன்மைகள்..
1. சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வேதிப்பொருள்களும், விட்டமின்களும் அளவிட, கம்பில் அதிக புரத சத்துக்கள் உள்ளது. வெள்ளை அரிசிகளை காட்டிலும் இதில் 8 மடங்கு இரும்பு சத்து அதிகமாக உள்ளது.
2. மேலும் கம்பில் சுண்ணாம்பு சத்து அதிகம் என்பதால் அதிகளவில் ஊட்டச்சத்து கிடைக்கும்.. அதனால் வளரும் குழந்தைகளுக்கு நல்லது..
3. சுகர் உள்ளவர்கள், சர்க்கரை சத்துக்கள் அதிகமாக இருக்கிற அரிசி சத்தத்தை சாப்பிட முடியாது.. அதனால் அவர்கள் இந்த கம்பை கூழ், களி மற்றும் தோசை செய்து சாப்பிட்டு வரலாம்.. அப்படி சாப்பிடுவதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் மற்றும் உடல் ஆரோக்கிமாகும்.
4. மேலும் கம்பு சாப்பிடுவதினால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. அதிலும் இந்த மழை காலத்தில் வரும் தொற்று நோய்களில் இருந்து தப்பிக்க இந்த கம்பு தானியத்தை வாரம் 2 அல்லது 3 முறை உங்கள் சாப்பாட்டில் எடுத்துக் கொள்வது நல்லது..



Click it and Unblock the Notifications