Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
பாண்டிச்சேரி ஸ்டைல் சிக்கன் மக்ரோனி - எப்படி செய்யணும் தெரியுமா?
Pondicherry Style Chicken Macaroni Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்போருக்கு மக்ரோனி பிடிக்குமா? அப்படியானால் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், பாண்டிச்சேரி ஸ்டைலில் மக்ரோனியை செய்யுங்கள்.
அதுவும் சிக்கன் சேர்த்து மக்ரோனியை செய்யும் போது, சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இதை மழை பெய்யும் வேளைகளில் செய்து சாப்பிட்டால், இன்னும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு பாண்டிச்சேரி ஸ்டைல் சிக்கன் மக்ரோனியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாண்டிச்சேரி ஸ்டைல் சிக்கன் மக்ரோனி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சில்லி பேஸ்ட்டிற்கு...
* காஷ்மீரி வரமிளகாய் - 5
* வரமிளகாய் - 5
மயோனைஸிற்கு...
* முந்திரி - 10 (ஊற வைத்துக் கொள்ளவும்)
* பன்னீர் - 50 கிராம்
* பூண்டு - 2 பல்
* மிளகு - 1 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* பால் - 1/4 கப்
சிக்கன் 65-க்கு...
* சிக்கன் - 250 கிராம்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மக்ரோனிக்கு...
* மக்ரோனி - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்
* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் - 1/4 கப்
* முட்டை - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* முட்டைக்கோஸ் - சிறிது
* கேரட் - சிறிது
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சுடுநீரில் காஷ்மீரி வரமிளகாய் மற்றும் வரமிளகாயை ஊற
வைத்து, அரைத்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் ஊற வைத்த முந்திரி, பன்னீர், பூண்டு பற்கள்,
மிளகு, உப்பு மற்றும் 1/4 கப் பால் சேர்த்து நன்கு மென்மையாக க்ரீமி
போன்று அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து சிக்கன் 65 செய்வதற்கு, சிக்கனை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சீரகத் தூள்,
மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு, எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு
பேஸ்ட், அரிசி மாவு, சோள மாவு சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மக்ரோனியை வேக வைப்பதற்கு, ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி,
அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதித்ததும், அதில் மக்ரோனியை சேர்த்து,
உப்பு தூவி நன்கு வேக வைத்து இறக்கி, நீரை வடித்துவிட்டு, குளிர்ந்த
நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு
ப்ரை செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மக்ரோனி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பூண்டு, இஞ்சி
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் ஸ்பிரிங் ஆனியனின் வெள்ளைப் பகுதியை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் உப்பு சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மிளகாய் விழுதை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் முட்டைக்கோஸ், கேரட் ஆகியவற்றை சேர்த்து, 1 நிமிடம் நன்கு
வதக்க வேண்டும்.
* பிறகு சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறி, வேக
வைத்துள்ள மக்ரோனியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ப்ரை செய்து வைத்துள்ள சிக்கன் 65-யை சேர்த்து, மிளகுத்
தூள் சேர்த்து, நன்கு கிளறி இறக்கி, மேலே செய்து வைத்துள்ள மயோனைஸை
ஊற்றி பரிமாறினால், சுவையான பாண்டிச்சேரி ஸ்டைல் சிக்கன் மக்ரோனி
தயார்.



Click it and Unblock the Notifications











