உங்க வீட்ல மதுரை மட்டன் கபாப் செஞ்சு பாருங்க..சும்மா சுவை அள்ளும்..!

Posted By:

சிக்கன் உடலுக்கு சூடு என்பதால் பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது. இந்த பதிவில் நாம் பார்க்க போவது மதுரை ஸ்டைல் மட்டன் கபாப்.. வீடே மணக்கும் இந்த மதுரை மட்டன் கபாப் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்.. இந்த கபாப் உடலைப் பெருக்க வைக்கும். அதனால் வளரும் குழந்தைகளுக்கு இந்த மதுரை மட்டன் கபாப் செய்து கொடுக்கலாம்..

அனைத்து விருந்துகளில் கபாப்களுக்கு என தனி இடம் உண்டு. இருப்பினும் அதனை கொஞ்சம் மாற்றி சுவையானதாகவும், தென்னிந்திய பாணியுடன் முயற்சித்து பார்க்க நினைத்தால் அதற்கு மட்டன் வடை சிறப்பானது. துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி, வடைக்கான மாவு, மற்றும் மசாலாப் பொருட்களை கலந்து வடை தயார் செய்யலாம். இதனை எண்ணெயில் பொறிப்பதற்கு பதிலாக, தவாவில் லேசான எண்ணெய் உற்றி பொன்னிறமாகும் வரை இரண்டு பக்கமும் பிரட்டி எடுத்தால் மட்டும் போதும். வாங்க இதைஅ எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த ரெசிபியை தெரிந்துக் கொள்ளலாம்..

how to make a madurai mutton kabab here the recipe

தேவையான பொருள்கள்

1. மட்டன் கொத்துக்கறி

2. இஞ்சி, பூண்டு விழுது

3. பெரிய வெங்காயம்

4. மிளகாய்த் தூள்

5. கரம் மசாலாப் பவுடர்

6. உப்பு

7. பப்பாளிக் காய் பேஸ்ட்

8. எண்ணெய்

9. வெண்ணெய்

செய்முறை

1. வெங்காயத்தை முதலில் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

2. பிறகு நன்கு சுத்தமாக கழுவிய ஆட்டு இறைச்சியை (அதாவது மட்டன் கொத்துக்கறியை) தண்ணீர் இல்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3. பின்னர் ஒரு கனமான பாத்திரத்தை எடுத்து அதில் மட்டன், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, வெண்ணெய், பப்பாளிக்காய் பேஸ்ட், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

4. பின்னர் மேற்கண்ட அந்தக் கலவையை சுமார் இரண்டு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து நன்றாக ஊற வைக்கவும்.

5. நன்கு ஊறிய அந்தக் கலவையை சில நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.

6. பின்னர் ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடேற்றவும்.

7. எண்ணெய் நன்கு காய்ந்த மாத்திரத்தில் நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்து இருக்கும் கலவையை கட்லட் போல வட்டமாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

8. இதோ இப்போது சுவையான மட்டன் கபாப் ரெடி! தேவைப்பட்டால் இதன் மேல் கொத்தமல்லி மற்றும் புதினாவை தூவி அலங்கரித்துப் பரிமாறலாம்.

மட்டனில் இருக்கும் கனிமச் சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் இதர பொருட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

[ of 5 - Users]
Story first published: Wednesday, August 28, 2024, 14:19 [IST]
Desktop Bottom Promotion