Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.
Kerala Special Milk Cake Recipe: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் மற்றும் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் ஸ்வீட் ஏதாவது செய்து கொடுக்குமாறு கேட்கிறார்களா? அப்படியானால் வீட்டில் 1 கப் கோதுமை மாவு இருந்தால், அதைக் கொண்டு கேரளா ஸ்பெஷல் மில்க் கேக்கை செய்து கொடுங்கள்.
இந்த கேக் கேரளாவில் உள்ள டீக்கடைகளில் மிகவும் பிரபலமானது. இந்த ஸ்வீட்டை வாயில் வைத்தால் அப்படியே கரைந்துவிடும். முக்கியமாக இந்த மில்க் கேக்கை செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். ஒருவேளை உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால், இதை டக்கென்று செய்து கொடுக்கலாம். அந்த அளவில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு கேரளா ஸ்பெஷல் மில்க் கேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா மில்க் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* ரவை - 1/4 கப்
* பால் பவுடர் - 1/4 கப்
* சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* காய்ச்சி ஆற வைத்த பால் - 1/2 கப்
* சர்க்கரை - 1 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* குங்குமப்பூ - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவு, 1/4 கப் ரவை, 1/4
கப் பால் பவுடர், 1/4 டீஸ்பூன் சமையல் சோடா மற்றும் 1 டேபிள் ஸ்பூன்
நெய் சேர்த்து கைகளால் நன்கு பிசைய வேண்டும்.
* பின் அதில் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி, நன்கு மென்மையாக பிசைந்து
கொள்ள வேண்டும்.
* பின்பு அதை மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1 கப் சர்க்கரை சேர்த்து, அத்துடன் 1 1/2
கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, சர்க்கரையை கரைய வைக்க
வேண்டும்.
* சர்க்கரை நன்கு கரைந்ததும், அதில் ஏலக்காய் தூள் மற்றும்
குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் பிசைந்து வைத்துள்ள மாவை கைகளால் நன்கு பிசைந்து, பின் அதை
தட்டையாக சற்று தடிமனாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் கத்தியால் சற்று பெரிய சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் வைத்து, வெட்டி
வைத்துள்ள துண்டுகளை சேர்த்து, பொன்னிறமாக பொரித்து எடுத்து, சூடாக
உள்ள சர்க்கரை பாகுவில் சேர்க்க வேண்டும்.
* பின் 1/2 மணிநேரம் மூடி வைத்து ஊற வைத்து பரிமாறினால், சுவையான
மில்க் கேக் தயார்.



Click it and Unblock the Notifications










