Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் பணியாரம் செய்ய தெரியுமா? இதோ ரெசிபி..!
chocolate Paniyaram: பொதுவாகவே குழந்தைகள் அனைவரும் சாக்லேட் என்றாலே விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அதை நாம் தினமும் சாப்பிட கொடுக்க முடியாது.. அப்படி கொடுத்தால் அவர்களுக்கு சளி பிடிக்கும், இரும்மல் வரும்.. அதனால் பள்ளி செல்லும் நேரத்தில் கொஞ்சம் உடலுக்கு முடியாமல் போகலாம்..
எனவே சாக்லேட்டை அப்படியே கொடுக்காமல் அதில் பால், முட்டை, நாட்டுசர்க்கரை கொஞ்சமாக சாக்லேட் கலந்து, சாக்லேட் பணியாரம் செய்துக் கொடுக்கலாம்.. பணியாரம் என்பது நம் பாரம்பரிய சிற்றுண்டி.. அது உடலுக்கு நல்லது.. இன்று சாக்லேட் வைத்து அருமையான பணியாரம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

தேவையான பொருட்கள்
1. 3 போர்பன் பிஸ்கட் பாக்கெட்
2. பால் 100மிலி
3. 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
4. 2 டேபிள் ஸ்பூன் நெய்
5. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
6. 2 முட்டை
7. 1 டெய்ரி மில்க் சாக்லேட்
செய்முறை
1. முதலில் போர்பன் பிஸ்கட் பிரித்து அதில் இருக்கும் கிரீமை தனியே எடுத்து பிஸ்கட் மட்டும் மிக்ஸியில் அடித்து பொடித்துக் கொள்ளவும். அப்படி இல்லை என்றால் ஏதாவது ஒரு சால்டெல் பிஸ்கட் இருந்தாலும் ஓகேதான்.. இதனுடன் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும். இட்லி மாவு பதத்திற்கு தேவையான அளவு பால் கொஞ்சம் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
2. இந்த கரைசலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி விட வேண்டும்.. இதனால் பணியாரம் நல்லா சாஃப்டாக வரும்..
3. பின்னர் பிஸ்கட் உள்ளிந்த அந்த க்ரீம் உடன் ஒரு சிறிய டைரி மில்க் சாக்லெட்டை சேர்த்து உருண்டைகளாக பிடித்து குட்டி குட்டி சாக்லேட் லட்டு போல சாக்லேட் உருண்டைகள் செய்யவும்.
4. இப்போது ஒரு பணியாரக் கல்லில் நெய் ஊற்றி பிஸ்கட் கலவையை சிறிது சேர்த்து சாக்லேட் உருண்டை சேர்த்து மேலே திரும்பவும் அந்த பிஸ்கட் கலவையை சேர்க்கவும். 5 முதல் 10 நிமிடம் கழித்து எப்போதும் பணியாரம் திருப்புவது போல திருப்பிப் எடுக்கலாம். அதிகமாக அனலில் வைக்காமல் சிமிலில் வைத்து பணியாரம் செய்தால் நன்றாக இருக்கும்..
5. சாக்லேட் பணியாரம் சாக்லேட் கேக் போல உள்ளிருக்கும் சாக்லேட் உருண்டைகள் உருகி சாக்லேட் லாவா போல வழிந்து வரும்.. பார்க்கும் போதே சாப்பிட தூண்டும்..
அதனால் இந்த சாக்லேட் பணியாரத்தை குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும் போது மாலை நேரங்களில் செய்து கொடுத்தால் நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள்.. அதுமட்டுமல்லாமல் இந்த பனியாரத்தை செய்வதற்கு அதிக நேரம் ஆகாது.. நிமிடத்தில் செய்து அசத்தலாம்..



Click it and Unblock the Notifications