Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
10 நிமிடத்தில் சப்பாத்தி, இட்லி, தோசைக்கு செய்திடலாம்.. கேப்சிகம் மசாலா கிரேவி.. இதோ ரெசிபி..!
கேப்சிகம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் வைட்டமின் சி நிறைந்த காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குடமிளகாயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், உங்கள் உணவில் அடிக்கடி அதனை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
ஆனால் பலருக்கு கேப்சிகத்தை எப்படி சமைத்து சாப்பிடுவது? என்று தெரியவில்லை அப்படிப்பட்டவர்களுக்கான அற்புதமான கேப்சிகம் மசாலா கிரேவி ரெசிபி இதோ.. இந்த கேப்சிகம் மசாலா கிரேவியை சப்பாத்திக்கு ஒரு சிறந்த சைட் டிஷ்ஷாக இருக்கும்.. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களாலும் அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிரது.. இப்போது கேப்சிகம் கிரேவியை செய்வது எப்படி? என்பது குறித்த செய்முறையை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:
கேப்சிகம் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
முந்திரி - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
காய்ந்த கஸ்தூரி மேத்தி - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 1/2 கப்
சர்க்கரை - 1/4 தேக்கரண்டி (தேவைப்பட்டால்)
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
செய்முறை:
1. முதலில் முந்திரியை வெந்நீரில் போட்டு சில நிமிடம் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்..
2. பிறகு தக்காளியை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
3. பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பூண்டு போட்டு வதக்கி, தக்காளி விழுதை போட்டு மெதுவாக வதக்கவும்.
4. ஒரு நிமிடம் வதங்கிய பின் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சிறு தீயில் வதக்கவும். பச்சை வாசனை போக குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும்.
5. பச்சை வாசனை போன பிறகு முந்திரி விழுது மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் கொஞ்சம் சேர்த்து நன்றாக கலந்து ஒரு முறை கொதிக்க விட வேண்டும்..
6. கடைசியாக குடைமிளகாய் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, காய்ந்த கஸ்தூரி மேத்தியை கையில் அரைத்து தூவி இறக்கினால், சுவையான கேப்சிகம் கிரேவி ரெடி..
கேப்ஸிகத்தின் நன்மைகள்
1. குடைமிளகாயில் வைட்டமின் 'சி' சத்து அதிகமுள்ளது. மேலு வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது.
2. குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.
3 . கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் குடமிளகாய் காக்கிறது. குடைமிளகாய், மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன.



Click it and Unblock the Notifications
