Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
சப்பாத்திக்கு இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைல் தவா சிக்கன் செய்யுங்க... எல்லாரும் 2 சப்பாத்தி அதிகமா சாப்பிடுவாங்க..
Hotel Style Tawa Chicken Recipe in Tamil: வார வாரம் சிக்கன் செய்தாலும் நம்மால் வெறுக்க முடியாத ஒன்று சிக்கன் தான். ஒவ்வொரு வாரமும் தவறால் நம் உணவில் இடம் பெற்று விடும். சில பொருட்களை கூட்டி குறைத்து சுவையை மாற்றி நாமும் விதம்விதமாக செய்து சாப்பிடும்.
எண்ணெய் பொரிப்போம், வாணலியில் வறுப்போம், கிரேவி, மற்றும் குழம்பு என அனைத்திற்கும் ஏற்றார் போல் அதன் சுவையை கொடுக்கும். சரி வாங்க இந்த வாரம் வித்தியாமான தவா சிக்கன் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1 கிலோ
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி - 1
- பூண்டு - 6 பல்
- இஞ்சி - சிறியது (2 இன்ச் அளவு)
- பச்சை மிளகாய் - 1
- காய்ந்த மிளகாய் - 6
- எலுமிச்சம் பழம் - 1
- மஞ்சள் தூள் - 1½ டீ ஸ்பூன்
- கொத்தமல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
- சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - ¾ டேபிள் ஸ்பூன்
- கிராம்பு - 3
- அன்னாசி பூ - 1
- ஏலக்காய் - 2
- பட்டை - 4 துண்டு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- சிக்கன் துண்டுகளை மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக அலசி எடுத்து கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தை கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- தோல் உரித்த பூண்டு மற்றும் நறுக்கிய இஞ்சியை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு பிழிந்து விதை நீக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கன், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- இதை நன்கு கலந்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் கொத்தமல்லி விதை, சோம்பு, சீரகம், கிராம்பு, அன்னாசி பூ, ஏலக்காய், பட்டை 2 துண்டு மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து மணம் வந்து பொன்னிறமாகும் வரை வறுத்து ஆறவிடவும்.
- பின் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
- ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் வழக்கத்தை விட அதிக அளவில் எண்ணெய் சேர்த்து காயவிடவும்.
- அதில் சீரகம் மற்றும் பட்டை சேர்த்து தாளித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வாதக்கவும்.
- பின் தக்காளி சேர்த்து நன்றாக மசிந்து வரும் வரை வேக விடவும்.
- அதனுடன் ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடத்திற்கு வேக விடவும்.
- பின் அதில் நாம் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கிளறி அரைப்பதம் வேக விடவும்.
- அதில் மிளகு தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
- கடைசியாக நறுக்கிய கருவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கினால் சுவையான தவா சிக்கன் ரெடி!



Click it and Unblock the Notifications