Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ஹோட்டல் ஸ்டைல் முட்டைக்கோஸ் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Hotel Style Muttaikose Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் முட்டைக்கோஸ் செய்தாலே சாப்பிடமாட்டார்களா? ஆனால் ஹோட்டல்களில் முட்டைக்கோஸ் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் நீங்கள் செய்யும் விதத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
ஹோட்டல்களில் கொடுக்கப்படும் முட்டைக்கோஸ் பொரியலுக்கு அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. சொல்லப்போனால் செய்வது மிகவும் சுலபம். அதற்கு ஒருசில பொருட்களே போதுமானது. முக்கியமாக தேங்காயுடன் ஒரு பொருளை சேர்த்து அரைத்தால், ஹோட்டல் சுவையில் பொரியல் வந்துவிடும்.

உங்களுக்கு இந்த ஹோட்டல் ஸ்டைல் முட்டைக்கோஸ் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் முட்டைக்கோஸ் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* முட்டைக்கோஸ் - 1/4 கிலோ
* பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன் (10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
அரைப்பதற்கு..
* தேங்காய் - 1/4 கப்
* சீரகம் - 2 சிட்டிகை
செய்முறை:
* முதலில் முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதே
சமயம் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி, 10
நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு இட்லி தட்டில் நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும்
பாசிப்பருப்பை சேர்த்து, இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி, 4 நிமிடம்
வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை
மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், அதில் வேக வைத்துள்ள
முட்டைக்கோஸ் மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் சீரகத்தை சேர்த்து
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக அரைத்த தேங்காயை பொரியலுடன் சேர்த்து, அதோடு
கொத்தமல்லியையும் தூவி நன்கு 2-3 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான
ஹோட்டல் ஸ்டைல் முட்டைக்கோஸ் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications