Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
கோவைக்காயை வாங்குனா இந்த மாதிரி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க...
Hotel Style Kovakkai Varuval In Tamil: கோவைக்காய் மிகவும் சத்தானது. ஆனால் கோவைக்காயை நிறைய பேர் விரும்பி சாப்பிடமாட்டார்கள். சொல்லப்போனால் கோவைக்காய் என்றாலே ஓடிவிடுவார்கள். அந்த அளவில் கோவைக்காயை வெறுப்பவர்கள் அதிகம். ஆனால் உண்மையில் கோவைக்காய் ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது.
முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் இந்த காயை அடிக்கடி செய்து சாப்பிடுவது நல்லது. உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த காயை வாரத்திற்கு 2-3 முறை சேர்த்து வருவது நல்லது. முக்கியமாக கல்லீரல் வீக்கம் கொண்டவர்கள் இந்த கோவைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர, கல்லீரல் வீக்கம் குறையும்.

இப்படிப்பட்ட கோவைக்காயை வறுவல் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதுவும் ஹோட்டல் ஸ்டைலில் செய்தால் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக சமைக்க தெரியாதவர்கள் இந்த வறுவலை செய்தால், வீட்டில் நல்ல பாராட்டைப் பெறலாம்.
உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் கோவைக்காய் வறுவவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோவைக்காய் - 1/2 கிலோ
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
அரைப்பதற்கு...
* வறுத்த வேர்க்கடலை - 1 கைப்பிடி
* வரமிளகாய் - 2
* பூண்டு - 3 பல்
செய்முறை:
* முதலில் கோவைக்காயை எடுத்து, நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் முனைப்பகுதியை நீக்கிவிட்டு, நீளவாக்கில் வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள கோவைக்காயை சேர்த்து நன்கு கிளறி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, காஷ்மீரி மிளகாய் தூளையும் சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, 5-10 நிமிடம்
காயை வேக வைக்க வேண்டும். காய் நன்கு வெந்ததும் தீயைக் குறைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை, பூண்டு பற்கள் மற்றும்
வரமிளகாய் சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்து பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக அரைத்த பொடியை வெந்து கொண்டிருக்கும் கோவைக்காயுடன்
சேர்த்து கிளறி, மூடி வைத்து, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால்,
சுவையான ஹோட்டல் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications