Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் கபாப்.. 10 நிமிஷத்துல செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Hotel Style Chicken Kebab Recipe In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. இப்படி மழை பெய்யும் போது நன்கு காரசாரமாகவும், சுவையாகவும் ஏதாவது செய்து சாப்பிடத் தோன்றும். எப்போதும் பஜ்ஜி போண்டா சாப்பிட்டு போரடித்திருந்தால், 1/2 கிலோ சிக்கன் கொத்து கறியை வாங்கி, அதைக் கொண்டு சிக்கன் கபாப் செய்யுங்கள்.
அதுவும் ஹோட்டல் ஸ்டைலில் சிக்கன் கபாப் செய்யும் போது, ருசியோ இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக மழை நேரத்தில் மாலை வேளையில் இந்த சிக்கன் கபாப் செய்து சாப்பிடும் போது, சுவை சூப்பராக இருக்கும். இந்த பக்குவத்தில் ஒருமுறை சிக்கன் கபாப் செய்தால், பின் உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி இந்த கபாப்பை செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் கபாப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் கபாப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் கொத்துக்கறி - 1/2 கிலோ
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* முட்டை - 1
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கன் கொத்துக்கறியை நீரில் கழுவி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு பற்கள், இஞ்சி
மற்றும் பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம்
மசாலாவை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் உப்பு சேர்த்து, 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு
பிசைந்து விட வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து, ஃப்ரிட்ஜ்ஜில் 20 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, ஊற வைத்த சிக்கனை எடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து நீளவாக்கில் உருட்டி, தட்டிக் கொள்ள வேண்டும். இப்படி தட்டிக்
கொள்வதன் மூலம், சிக்கன் வேகமாக வேகும். இதேப் போன்று அனைத்தையும்
தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய்
சேர்த்து உருகியதும், தட்டி வைத்துள்ள சிக்கனை போட்டு, முன்னும்
பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான சிக்கன் கபாப்
தயார்.



Click it and Unblock the Notifications