Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
இட்லி, தோசைக்கு ஒருவாட்டி இந்த க்ரீன் சட்னியை செய்யுங்க.. எவ்வளவு சாப்பிட்டாலும் கேட்டுட்டே இருப்பாங்க..
Hotel Green Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அப்படி காலையில் செய்யும் இட்லி, தோசைக்கு சைடு டிஷ் தேர்வு செய்வது என்பது கடினமாக உள்ளதா? அப்படியானால் உங்களின் கவலையைப் போக்கும் வகையில், தினமும் ஒருசில எளிமையான சட்னி ரெசிபிக்களை நாங்கள் பகிர்ந்து வருகிறோம். அதுவும் மிகவும் ஈஸியாக இருக்கும் வகையிலான சட்னியைக்களை பகிர்ந்து வருகிறோம்.
இதுவரை நீங்கள் க்ரீன் சட்னியை சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த க்ரீன் சட்னியில் ஒன்று புதினா அல்லது மல்லி அதிகமாக இருக்கும். ஆனால் இன்று நாம் பார்க்கப் போகும் க்ரீன் சட்னியில் வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் போன்றவை மட்டுமே சேர்க்கப்படும். இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, பஜ்ஜி, வடை போன்ற ஸ்நாக்ஸ்களுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு க்ரீன் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீன் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 சிட்டிகை
* புளி - சிறிய துண்டு
* இஞ்சி - 1/4 இன்ச்
* பூண்டு - 8 பல்
* வெங்காயம் - 2
* பச்சை மிளகாய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து, லேசாக நிறம் மாற வறுக்க
வேண்டும்.
* பின் அதில் சீரகத்தை சேர்த்து தாளித்து, புளி, இஞ்சி, பூண்டு
சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கயி வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* பிறகு பச்சை மிளகாயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் புதினா, கொத்தமல்லி சேர்த்து, அதன் இலைகள் சுருங்கும் வரை
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கி குளிர வைத்த பொருட்களை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான க்ரீன் சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications