Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
வீட்டிலேயே தக்காளி சாஸ் செய்வது எப்படி தெரியுமா?
தக்காளி சாஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். அதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. உங்களுக்கு தக்காளி சாஸை எப்படி வீட்டில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
சைனீஸ் ரெசிபிக்கள் அனைவருக்குமே பிடிக்கும். சைனீஸ் ரெசிபிக்களில் சாஸ் தான் மிகவும் அவசியமான பொருள். ஏனெனில் சாஸ் தான் சைனீஸ் ரெசிபிக்களுக்கு தனித்துவமான சுவையைத் தருகிறது. அதில் தக்காளி சாஸ் என்று அழைக்கப்படும் தக்காளி கெட்சப் அப்படியே சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் தக்காளி சாஸை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். பலரது வீடுகளில் தக்காளி சாஸ் பாட்டில் வாரத்திற்கு ஒன்று காலியாகும். ஆனால் இப்படி தக்காளி சாஸ் பாட்டிலை வாரத்திற்கு ஒன்று வாங்கினால், பட்ஜெட் என்னாவது? எனவே இனிமேல் தக்காளி சாஸை கடைகளில் வாங்காமல் அதை வீட்டிலேயே செய்யலாமே!

ஆம், தக்காளி சாஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். அதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. உங்களுக்கு தக்காளி சாஸை எப்படி வீட்டில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சாஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்த கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நன்கு கனிந்த பெரிய தக்காளி - 6
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வினிகர் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் தக்காளி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீரை கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தக்காளிகளைப் போட்டு, மூடி வைத்து 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். தக்காளியில் இருந்து தோல் உரிய ஆரம்பித்தால், அடுப்பை அணைத்துவிட்டு, தக்காளிகளை குளிர வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு குளிர்ந்ததும், அதை பிளெண்டர் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியில் அரைத்த தக்காளியை வடிகட்டியைப் பயன்படுத்தி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த வாணலியை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். தக்காளி கொதிக்கும் போது, அது அடிபிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறி விட வேண்டும்.
* 10 நிமிடம் தக்காளி நன்கு கொதித்ததும், அதில் 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* தக்காளி கலவையானது கெட்டியானதும், அதில் 3 டேபிள் ஸ்பூன் வினிகரை சேர்த்து கிளறி, இறக்கி குளிர வைத்தால், சுவையான தக்காளி சாஸ் தயார்.



Click it and Unblock the Notifications