Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஓவன் ஏதும் இல்லாமல் தோசை தவாவில் பிட்சா செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Homemade Pizza Recipe In Tamil: உங்கள் பிள்ளைகளுக்கு பிட்சா என்றால் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி கடைகளில் வாங்கி கொடுக்க சொல்லி அடம் பிடிப்பார்களா? அப்படியானால் இனிமேல் கடைகளில் பிட்சாவை வாங்காமல், அதை வீட்டிலேயே செய்து கொடுங்கள். அதுவும் பிட்சா செய்வதற்கு ஓவன் எதுவும் தேவையில்லை. தோசை தவா கொண்டே எளிமையான முறையில் செய்யலாம்.
இந்த பிட்சா செய்வதற்கு ஸ்பெஷலாக எந்த பொருட்களையும் கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மைதாவும், இன்ஸ்டன்ட் ட்ரை ஈஸ்ட் இருந்தால், சூப்பரான பேஸ் தயாரித்து, வீட்டில் உள்ள காய்கறிகளைக் கொண்டே டேஸ்டியான மற்றும் ஹெல்த்தியான பிட்சாவை செய்யலாம்.

உங்களுக்கு தோசை தவாவைப் பயன்படுத்தி வீட்டிலேயே எப்படி பிட்சா செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிட்சா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 2 கப்
* வெதுவெதுப்பான நீர் - 3/4 கப்
* இன்ஸ்டன்ட் ட்ரை ஈஸ்ட்/ஆக்டிவ் ஈஸ்ட் - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 2 டீஸ்பூன்
* ரெட் சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
* ஓரிகனோ - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* தக்காளி - 1 (சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* குடைமிளகாய் - 1/4 (சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* பன்னீர் - 25 கிராம் (சிறு சதுரத் துண்டுகளாக வெட்டிக்
கொள்ளவும்)
* துருவிய சீஸ் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் ஆக்டிவ்
ஈஸ்ட்டை சேர்த்து, அத்துடன் சர்க்கரை சேர்த்து கலந்து, 10 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் மைதா மாவை சேர்த்து,
அத்துடன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, மூடி வைத்து
1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்
* 1 மணிநேரம் கழித்து மூடியைத் திறந்து, மாவை கைகளால் நன்கு பிசைந்து,
இரண்டாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு தட்டையான பேன் அல்லது தோசை தவாவை அடுப்பில் வைத்து,
அதில் எண்ணெயை தடவி, அதன் மேல் ஒரு பாதி மாவை வைத்து தட்டையாக பரப்பி
விட வேண்டும்.
* பிறகு அதன் மேல் தக்காளி சாஸ் மற்றும் ரெட் சில்லி சாஸை தடவி, மேலே
சிறிது சீஸை தூவி விட வேண்டும்.
* பின்பு அதன் மேல் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பன்னீர்
துண்டுகளை சேர்த்து, மேலே மீண்டும் சிறிது சீஸை தூவி விட
வேண்டும்.
* கடைசியாக மேலே ஓரிகனோவை தூவி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 15
நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான பிட்சா தயார். இதேப் போன்று
மீதமுள்ள மாவையும் செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications