Latest Updates
-
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும் -
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வீட்டில் உள்ள பொருட்களை வெச்சே 5 நிமிடத்தில் பிட்சா செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Homemade Pizza Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? அதுவும் உங்கள் பிள்ளைகள் பிட்சா வேண்டுமென்று கேட்கிறார்களா? கடைகளில் விற்கப்படும் பிட்சா உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே உங்கள் பிள்ளைகள் பிட்சா கேட்டால் உடனே போனில் ஆர்டர் செய்யாமல், வீட்டில் பிரட் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் பிட்சாவை செய்யுங்கள்.
இந்த பிரட் பிட்சா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக இப்படி வீட்டில் பிட்சா செய்யும் போது, உங்கள் பிள்ளைகளுக்கு பிடித்த காய்கறிகள் அல்லது அவர்கள் சாப்பிட மறுக்கும் காய்கறிகளை சேர்த்து செய்து கொடுக்கலாம்.

உங்களுக்கு வீட்டிலேயே எப்படி பிட்சா செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிட்சா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சீஸ் க்யூப்ஸ் - 3
* குடைமிளகாய் - பாதி
* ஸ்வீட் கார்ன் - 1 கைப்பிடி
* பிட்சா சீசனிங் - 1/2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1/4 டீஸ்பூன்
* பிரட் - 7 துண்டுகள்
* தக்காளி கெட்சப் - தேவையான அளவு
* வெண்ணெய் - சிறிது
செய்முறை:
* முதலில் சீஸ் க்யூப்களை துருவிக் கொள்ள வேண்டும்.
* அதேப் போல் குடைமிளகாயை பொடியாக நறுக்கி, அதை சீஸ் உடன் சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் ஸ்வீட் கார்னை அதில் ஒரு கைப்பிடி சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் பிட்சா சீசனிங், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கலந்து
கொள்ள வேண்டும்.
* பிறகு பிரட் துண்டுகளை எடுத்து, அதன் மேல் தக்காளி கெட்சப்பை தடவி,
கலந்து வைத்துள்ள சீஸ் கலவையை பரப்பி விட வேண்டும்.
* ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை தடவி, முதலில் ஒரு பிரட்
துண்டை அதில் வைத்து, குறைவான தீயில் வைத்து, மூடி வைத்து, 5 நிமிடம்
வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட்
துண்டுகளையும் செய்தால், சுவையான பிரட் பிட்சா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications