Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
தேங்காயுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க... டேஸ்ட் அதிகமாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்...!
Healthy Coconut Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு சிறந்த சைடிஷ் என்றால் அது தேங்காய் சட்னிதான். தேங்காய் சட்னி எவ்வளவு சுவையானதோ அதேயளவிற்கு செய்வதற்கு எளிமையானதும் கூட. தேங்காய் சட்னியை பொதுவாக தமிழ்நாட்டிலேயே மாவட்டத்திற்கு ஏற்ப வித்தியாசமாக செய்வோம். அந்த வகையில் மாநிலங்களுக்கு ஏற்பவும் தேங்காய் சட்னி செய்யும் முறை மாறுபடும்.
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் தேங்காய் சட்னி சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் அதனுடன் சில பொருட்களை சேர்த்து அரைக்கும் போது தேங்காய் சட்னியின் சுவை அதிகரிப்பதுடன் ஆரோக்கியமானதாகவும் மாறும். இன்று உறவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டால் இந்த ஸ்பெஷல் தேங்காய் சட்னியை அரைத்துப் பாருங்கள். இதன் தனித்துவமான சுவை உங்களை வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட வைக்கும்.

உங்களுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரசாரமான முட்டை புளிகுழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/2 கப் புதிதாகத் துருவிய தேங்காய்
- 1/2 கப் நறுக்கிய கொத்தமல்லி
- 1/2 டீஸ்பூன் கடலை எண்ணெய்
- 2 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 சிறிய நறுக்கிய பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 டீஸ்பூன் கடலை எண்ணெய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- ஒரு கடாயில் கடலை எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைச் சேர்த்து, அவை மொறுமொறுப்பாகி பழுப்பு நிறமாக மாறும் வரை லேசாக வறுக்கவும். பின்னர் அவற்றை தனியாக ஆற வைக்கவும்.
- பருப்பு ஆறியதும், அவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நைசான தூளாக அரைக்கவும்.
- பின்னர் அதனுடன் துருவிய தேங்காய், கொத்தமல்லி, பச்சை மிளகாய், துருவிய இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு வழவழப்பான விழுதாக அரைக்கவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.
- சட்னியை தாளிப்பதற்கு, ஒரு சிறிய கடாயில் கடலை எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்க்கவும்.
கடுகு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து, மிதமான தீயில் 10 வினாடிகள் வதக்கவும்.
- இந்தத் தாளிப்பை ஆரோக்கியமான தேங்காய் சட்னியின் மீது ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான, ஆரோக்கியமான தேங்காய் சட்னி ரெடி.



Click it and Unblock the Notifications