Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
குண்டூர் சிக்கன் வறுவல்
உங்களுக்கு ஆந்திரா ஸ்பெஷலான குண்டூர் சிக்கன் வறுவல் ரொம்ப பிடிக்குமா? அதை உங்கள் வீட்டில் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே உங்களுக்காக குண்டூர் சிக்கன் வறுவல் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா உணவுகள் மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். அதிலுல் குண்டூர் ரெசிபிக்கள் அற்புதமான ருசியுடன் இருக்கும். உங்களுக்கு ஆந்திரா ஸ்பெஷலான குண்டூர் சிக்கன் வறுவல் ரொம்ப பிடிக்குமா? அதை உங்கள் வீட்டில் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே உங்களுக்காக குண்டூர் சிக்கன் வறுவல் எப்படி செய்வதென்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குண்டூர் சிக்கன் வறுவல் ரசம் சாத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

இந்த வாரம் நீங்கள் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை முயற்சிக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள குண்டூர் சிக்கன் வறுவலை முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3-4
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
வறுத்து பொடி செய்வதற்கு...
* மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2-3
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/8 டீஸ்பூன்
* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 2
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை ஒரு பௌலில் எடுத்து, அதில் தயிரை ஊற்றி, அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து பிரட்டி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து பொடி செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து, அதன் பின் துருவிய தேங்காய் மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, அரை கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கன் அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது சிக்கனை கிளறி விட வேண்டும். நீர் வற்றி சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, 2 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான குண்டூர் சிக்கன் வறுவல் தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications
