Latest Updates
-
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா?
கொய்யாப்பழத்தை வைச்சு இப்படி ஒரு சட்னி அரைச்சா இனிமே இட்லி, தோசைக்கு வேற சட்னியே அரைக்க மாட்டிங்க...!
Guava Chutney Recipe in Tamil: நாம் இட்லி, தோசைக்கு விதவிதமாய் வகை வகையாய் பல சட்னி செய்து சாப்பிட்டிருப்போம். சில வகை காய்கறிகளில் கூட சட்னி செய்து சாப்பிட்டிருப்போம். ஒரு சில பழங்களை வைத்து கூட சட்னி செய்து சாப்பிடலாம். பெரும்பாலும் கொய்யாப் பழம் நன்றாக கனிந்து விட்டால், சிலருக்கு சாப்பிட பிடிக்காமல் தூக்கி வீசி விடுவார்கள். ஆனால் அப்படி வீணாக்காமல், சுவையான சட்னி செய்து சாப்பிடலாம். எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- கொய்யாப்பழம் - 1
- காஷ்மீர் மிளகாய் - 5
- வரமிளகாய் - 3 (காரத்திற்கு ஏற்ப கூட்டி குறைத்து கொள்ளவும்)
- சீரகம் - 1 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
- தேங்காய் - ½ மூடி
- பூண்டு - 3 பல்
- சின்ன வெங்காயம் - 5
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - ½ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - சிறிதளவு
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - ¼ டீ ஸ்பூன்
செய்முறை:
- நன்றாக பழுத்த கொய்யாப் பழத்தை சுத்தமாக கழுவி சிறிய துண்டுகளாக
நறுக்கி கொள்ளவும்.
- பூண்டு மற்றும் வெங்காயத்தின் தோலை நீக்கி சுத்தம் செய்து
வைக்கவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ சுத்தம் செய்து கொள்ளவும்.
- கொத்தமல்லி இலைகளை மண் இல்லாமல் நன்றாக கழுவி சுத்தம் செய்து
எடுத்து கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- அதில் பூண்டு, சின்ன வெங்காயம், மற்றும் புளி சேர்த்து நன்றாக
வதக்கி ஆற விடவும்.
- மிக்ஸி ஜாரை எடுத்து அதில் காஷ்மீர் மிளகாய், வரமிளகாய், சீரகம்
மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- அதனுடன் கொத்தமல்லி இலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக
அரைக்கவும்.
- அதனுடன் வதக்கி ஆற வைத்த வெங்காயம், பூண்டு மற்றும் புளி சேர்த்து
நன்றாக அரைத்து கொள்ளவும்.
- கடைசியாக வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக
அரைத்து கொள்ளவும்.
- சட்னியை தாளிக்க கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- அதனுடன் கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து
பொன்னிறமாகும் வரை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- இதை சட்னி உடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். சுவையான
கொய்யாப்பழ சட்னி தயார்!



Click it and Unblock the Notifications