Latest Updates
-
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
அடுத்த முறை கொய்யாப்பழத்தை வெச்சு இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு சூப்பரா இருக்கும்...
Guava Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் கொய்யாப்பழம் உள்ளதா? காலையில் தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அந்த கொய்யாப்பழத்தைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.
இந்த கொய்யாப்பழ சட்னி தோசை, இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாகவும், சற்று வித்தியாசமான ருசியுடனும் இருக்கும். குறிப்பாக இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கொய்யாப்பழ சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொய்யாப்பழ சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொய்யாப்பழம் - 1
* உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2
* பூண்டு - 3 பல்
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* புளி - 1 சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 2
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் புளியை சேர்த்து நிறம் மாறும் வரை
நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கொய்யாப்பழம், கொத்தமல்லியை சேர்த்து சிறிது நேரம்
வதக்க வேண்டும்.
* அடுத்து துருவிய தேங்காயை சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கி வைத்துள்ள பொருட்களை போட்டு,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில்
எடுத்துக் கொண்டால், சுவையான கொய்யாப்பழ சட்னி தயார்.
Image Courtesy: Grehlakshmi



Click it and Unblock the Notifications