Latest Updates
-
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம்
1 கைப்பிடி வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செஞ்சு பாருங்க.. இட்லிக்கு சும்மா அள்ளும்..
Groundnut Tomato Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? பெரும்பாலும் வீட்டில் இட்லி செய்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக தக்காளி சட்னியைத் தான் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் தக்காளி சட்னியை செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை தக்காளி சட்னியை செய்வதாக இருந்தால், அத்துடன் வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்படி வேர்க்கடலை சேர்த்து செய்யும் தக்காளி சட்னியானது சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும். அதோடு இந்த சட்னியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த சட்னி குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 1 கைப்பிடி
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* பூண்டு - 5 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் கொத்தமல்லியை சேர்த்து வதக்கி, ஒருதட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி, தக்காளி
மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை
சேர்த்து, அத்துடன் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை, மிளகாயை சேர்த்து,
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான வேர்க்கடலை தக்காளி
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications