Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
அட்டகாசமான மும்பை பட்டாணி மசாலா ரெசிபி... செஞ்சு பாருங்க... சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும்...!
Green Peas Masala Recipe in Tamil: இட்லி, தோசைக்குப் பிறகு பொதுவாக அதிகளவு மக்களால் விரும்பி சாப்பிடப்படும் உணவென்றால் சப்பாத்தி மற்றும் பூரிதான். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பெரும்பாலும் விரும்பி சாப்பிடும் உணவு சப்பாத்திதான். பொதுவாக சப்பாத்தி செய்தால் அதற்கு உருளைக்கிழங்கு குருமாதான் செய்வோம். நமது ஆழ்மனதில் சப்பாத்திக்கு அதுதான் சிறந்த சைடிஷ் என்ற எண்ணம் உருவாகிவிட்டது.
ஆனால் சப்பாத்திக்கு அதைவிட பல சூப்பரான சைடிஸ்கள் உள்ளது. அதில் ஒன்றுதான் பட்டாணி மசாலா. இந்த பட்டாணி மசாலா வடநாட்டு ஸ்டைலில் செய்யக்கூடியது மற்றும் வித்தியாசமான சுவையுடையது. இந்த பட்டாணி மசாலா ஹோட்டல்களில் செய்யப்படுவதை விட அருமையான சுவையில் இருக்கும். இந்த சூப்பரான பட்டாணி மசாலாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 1 கப் பச்சை பட்டாணி
- 2 நறுக்கிய வெங்காயம்
- 4 தக்காளி
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ¼ ஸ்பூன் வெந்தயம்
- ¼ ஸ்பூன் சீரகம்
- 2 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
- 2 ஸ்பூன் மல்லித்தூள்
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ ஸ்பூன் கரம் மசாலா
- கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி
- ¼ டீஸ்பூன் சர்க்கரை
- 1 ஸ்பூன் வெண்ணெய்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 அங்குல இலவங்கப்பட்டை
- 1 ஏலக்காய்
- 2 கிராம்பு
செய்முறை:
- முதலில் வெந்தயம் மற்றும் சீரகத்தை ஒரு பாத்திரத்தில் சில துளிகள் எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும்.
- இது ஆறியதும் பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் 1 தேக்கரண்டி எண்ணெயைச் சேர்த்து, எண்ணெய் சூடானதும் அதில் இஞ்சி, பூண்டு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
- இது நன்கு ஆறியதும் குளிர வைத்து பின்னர் மிக்ஸியில் அரைக்கவும்.
- பின்னர் குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கிராம்பு, ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் அரைத்த வெங்காய தக்காளியைச் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- மசாலா நன்கு வதங்கியதும் அதில் பட்டாணி சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் கால் ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.
- பின்னர் குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- விசில் அடங்கியதும் மூடியைத் திறந்து அதில் வெந்தயம் மற்றும் சீரகப்பொடியை சேர்த்து கிளறவும்.
- மசாலா நன்கு கொதித்ததும் அதில் வெண்ணெய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
- சுவையான பட்டாணி மசாலா ரெடி. சப்பாத்தி மற்றும் பூரியுடன் சூடாக பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications