Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சிக்கனுடன் பட்டாணி சேர்த்து இந்த மாதிரி செய்யுங்க...சப்பாத்தி, புரோட்டாக்கு சூப்பரா இருக்கும்...ட்ரை பண்ணுங்க!
Green Peas Chicken Masala Recipe in Tamil: சண்டே என்றாலே அது அசைவ உணவுக்கான நாள் என்று மாறிவிட்டது. மற்ற நாட்களில் நான் வெஜ் சாப்பிட்டாலும் சண்டே அன்று சாப்பிடும் அசைவ உணவுகள் கொஞ்சம் ஸ்பெஷல்தான். சிக்கன், மட்டன், மீன் சண்டே எப்போதுமே பெரும்பாலான வீடுகளில் களைகட்டும். அசைவ உணவுகளை பல வித்தியாசமான வழிகளில் சமைக்கலாம்.
சமைப்பது என்று வரும் போது மற்ற அசைவ உணவுகளை விட சிக்கனை சமைப்பது எளிதானது. சிக்கனை சமைக்கும் வழிகளுக்கு முடிவேயில்லை. அந்த வகையில் மிகவும் வித்தியாசமான ஒரு சிக்கன்தான் பட்டாணி சிக்கன் மசாலா. சப்பாத்தி, புரோட்டாவுக்கு வழக்கமான பட்டாணி மசாலா செய்வதற்குப் பதில் இப்படி சிக்கன் சேர்த்து சமைப்பது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த பதிவில் சூப்பரான சைடிஷான சிக்கன் பட்டாணி மசாலாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

- சிக்கன் - அரை கிலோ
- பச்சை பட்டாணி கால் கிலோ
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 2
- பட்டை - 2
- கிராம்பு - 4
- ஏலக்காய் - 2
- மிளகு - ஒரு ஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - 3 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- கெட்டி தயிர் - 5 ஸ்பூன்
- ஊறவைத்த முந்திரி - 10
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- தண்ணீர் தேவையான அளவு
- கரம் மசாலா - 1 ஸ்பூன்
- கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன்
செய்முறை:
- அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்
- இஞ்சி பூண்டு வதங்கிய பின் சிக்கனுடன் கொத்தமல்லி தூள் மற்றும் மிளகாய்த் தூள் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்
- சிக்கன் ஐந்து நிமிடம் வதக்கிய பின் பச்சை பட்டாணி கெட்டியான தயிர் ஒன்றை கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் வேக வைக்கவும்
- ஊற வைத்த முந்திரியை தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- சிக்கன் பட்டாணி வெந்தபின் அரைத்து வைத்திருந்த முந்திரி பேஸ்ட் கரம் மசாலா சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்
- 5 நிமிடம் வெந்தபின் கடைசியில் கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கினால் சூப்பரான சிக்கன் பட்டாணி மசாலா ரெடி!
- இந்த சிக்கன் மசாலா சப்பாத்தி, புரோட்டா மற்றும் இடியாப்பம் போன்றவற்றுக்கு அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications