Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
முட்டை இருந்தா.. ஒருவாட்டி இந்த மாதிரி முட்டை சாதம் செய்யுங்க.. நொடியில் காலியாயிடும்...
Green Egg Rice Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் முட்டையை ஏதாவது ஒரு வகையில் சேர்ப்பீர்களா? அதுவும் வீட்டில் மதியம் வடித்த சாதம் அதிகம் இருந்தால், இரவு நேரத்தில் அந்த சாதத்தை முட்டையுடன் சேர்த்து முட்டை சாதம் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தான் முட்டை சாதம் செய்வீர்களா?
அப்படியானால் ஒருமுறை கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்து பேஸ்ட் செய்து, க்ரீன் முட்டை சாதம் செய்யுங்கள். இப்படி சாதம் செய்யும் போது, இதுவரை முட்டை சாதத்தை விரும்பி சாப்பிடாதவர்கள், கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி, இந்த சாதத்தை செய்தால் நொடியில் காலியாகிவிடும்.

உங்களுக்கு க்ரீன் முட்டை சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீன் முட்டை சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* பச்சை மிளகாய் - 7
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
முட்டை சாதத்திற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* முட்டை - 5
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* சாதம் - 1 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை
மிளகாய், வெங்காயம், சீரகம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள க்ரீன் பேஸ்ட்டை சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* மேலே எண்ணெய் பிரிந்து வரும் போது, அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி,
அதன் மேல் மஞ்சள் தூள் மற்றும் முட்டைக்கு மட்டும் தேவையான அளவு உப்பு
சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் கரம் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அதில் 1 கப் சாதத்தை சேர்த்து நன்கு மசாலா அனைத்தும்
சாதத்துடன் ஒன்று சேரும் வரை கிளறி இறக்கினால், சுவையான க்ரீன் முட்டை
சாதம் தயார்.



Click it and Unblock the Notifications