Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
ஆந்திரா பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... டேஸ்ட் சும்மா சுருக்குனு இருக்கும்...!
Andhra Style Green Chilli Chicken Recipe in Tamil: சண்டே வந்தாலே சிக்கனும், மட்டனும்தான். சிக்கனை எண்ணற்ற முறைகளில் சமைக்கலாம். பொதுவாக ஆந்திரா ரெசிபிக்கள் என்றாலே நினைவிற்கு வருவது காரம் தான். ஏனெனில் ஆந்திரா உணவுகள் அனைத்தும் அவ்வளவு காரசாரமாக இருக்கும். அதே நேரம் சுவையாகவும் இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் இன்னும் அற்புதமாக இருக்கும்.
அதில் பலரும் விரும்பி உண்ணக்கூடிய ஓர் சமையல் என்றால், அது ஆந்திரா சில்லி சிக்கன் சிக்கன் அல்லது பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி. இந்த ரெசிபியை நீங்கள் உங்கள் வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கீழே உங்களுக்காக ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
- அரை கிலோ சிக்கன்
- ½ டீஸ்பூன் மஞ்சள்
- 1 டீஸ்பூன் உப்பு
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
பச்சை மசாலா விழுது:
- 10-12 பச்சை மிளகாய்
- 1 கப் புதினா அல்லது கொத்தமல்லி இலைகள்
- 1 இஞ்ச் இஞ்சி துண்டு
- 10 பல் பூண்டு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் மிளகு
- 2 ஏலக்காய்
- தேவையான அளவு தண்ணீர்
மற்ற பொருட்கள்:
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1 பிரியாணி இலை
- 1 பெரிய வெங்காயம்
- கறிவேப்பிலை சிறிதளவு
- ½ டீஸ்பூன் கரம் மசாலா
- தேவையான அளவு உப்பு
- கொத்தமல்லி இலை சிறிதளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் சிக்கனை மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாற்றுடன் நன்கு கலந்து 30-45 நிமிடங்கள் ஊற விடவும்.
- பச்சை மிளகாய் விழுது அரைக்க பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, ஏலக்காயை சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும். தேவையான அளவு தண்ணீர் மட்டுமே சேர்க்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர் பிரியாணி இலை மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- அதன்பின் பச்சை மசாலா விழுதை சேர்த்து மென்மையான தீயில் 5-6 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
- பின்னர் ஊறவைத்த சிக்கனை இதில் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான தீயில் 25-30 நிமிடங்கள் சிக்கன் வெந்து மிருதுவாகும் வரை சமைக்கவும்.
- கிரேவி பதத்தில் வேண்டுமென்றால் இப்போதே இறக்கவும், இல்லையெனில் நன்கு சுண்டும் வரை வறுக்கவும்.
- கடைசியாக கரம் மசாலாவை தூவி, நன்கு கிளறிவிட்டு மேலே அலங்கரிக்க சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.



Click it and Unblock the Notifications