Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சிக்கன் வாங்குனா.. ஒருவாட்டி இந்த பொள்ளாச்சி பச்சை மிளகாய் சிக்கன் வறுவலை ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்...
Pollachi Pachai Milagai Chicken Varuval Recipe In Tamil: நீங்கள் உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கனை செய்வீர்களா? எப்போது சிக்கன் வாங்கினாலும் ஒரே மாதிரி தான் சமைத்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை பொள்ளாச்சியில் செய்யப்படும் பச்சை மிளகாய் சிக்கன் வறுவலை செய்து சாப்பிடுங்கள்.
இந்த பச்சை மிளகாய் சிக்கன் வறுவல் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். பச்சை மிளகாய் அதிகம் சேர்த்தாலும், காரம் அதிகம் தெரியாது. அதற்கு பதிலாக சுவை தான் கூடியிருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு பொள்ளாச்சி பச்சை மிளகாய் சிக்கன் வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொள்ளாச்சி பச்சை மிளகாய் சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* சின்ன வெங்காயம் - 200 கிராம்
* பச்சை மிளகாய் - 8-10
* பூண்டு - 8-10 பல்
* இஞ்சி - 1 1/2 இன்ச்
* கறிவேப்பிலை - 1 கொத்து
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் துண்டுகள்- 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயத்தை சேர்த்து சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே ஜாரில் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை
சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்த ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள பூண்டு, இஞ்சி, மிளகாயை சேர்த்து
நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நன்கு கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, கழுவி வைத்துள்ள சிக்கனை
சேர்த்து சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி, நீர் விட்டு வரும் வரை
வேக வைக்க வேண்டும்.
* பின் மூடி வைத்து 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் தேங்காய் துண்டுகளை
சேர்த்து கிளறி, நீர் வற்றும் வரை வேகவைத்து இறக்கினால், சுவையான
பொள்ளாச்சி பச்சை மிளகாய் சிக்கன் வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications