Latest Updates
-
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா?
க்ரீன் சிக்கன் கிரேவி
சிக்கனைக் கொண்டு பலவிதமான சுவையான ரெசிபிக்களை சமைத்து சாப்பிடலாம். அதில் ஒரு அற்புதமான ரெசிபி தான் க்ரீன் சிக்கன் கிரேவி. இந்த கிரேவி நாண், சப்பாத்தி, புலாவ், சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
சிக்கனில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த சிக்கனைக் கொண்டு பலவிதமான சுவையான ரெசிபிக்களை சமைத்து சாப்பிடலாம். அதில் ஒரு அற்புதமான ரெசிபி தான் க்ரீன் சிக்கன் கிரேவி. இந்த கிரேவி நாண், சப்பாத்தி, புலாவ் அல்லது சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த சிக்கன் கிரேவியை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுத்தால், அவர்களின் பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு க்ரீன் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீன் சிக்கன் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 1/4 கப்
* கெட்டியான தேங்காய் பால் - 1/4 கப்
* எலுமிச்சை சாறு - 3-4 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* கொத்தமல்லி - 1 கட்டு
* புதினா - 1/2 கட்டு
* பச்சை மிளகாய் - 4-5
* சின்ன வெங்காயம் - 3
* இஞ்சி - 1 1/2 இன்ச்
* பூண்டு - 7-8 பல்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய சிக்கனில் மிளகுத் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தயிர், மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து குறைந்தது 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு நீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, நன்கு சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், தேங்காய் பால் சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான க்ரீன் சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
