Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்... குடைமிளகாய் சட்னி
குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. எனவே குடைமிளகாயை உணவில் அதிகம் சேர்க்கும் போது நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உங்களுக்கு குடைமிளகாய் சட்னி எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஒரு வித்தியாசமான சட்னியை செய்ய ரெடியா இருக்கீங்களா? அப்படியானால் குடைமிளகாய் சட்னியை செய்யுங்கள். இந்த குடைமிளகாய் சட்னி செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக இந்த சட்னி வேலை முடிந்து வீட்டிற்கு சோர்வாக வருபவர்கள், வேகமாக செய்து சாப்பிடும் வகையில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். சொல்லப்போனால், இது பேச்சுலர்களுக்கு ஏற்ற ரெசிபியும் கூட.

முக்கியமாக குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. எனவே குடைமிளகாயை உணவில் அதிகம் சேர்க்கும் போது நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உங்களுக்கு குடைமிளகாய் சட்னி எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 6 பல்
* எள்ளு விதை - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய துண்டு
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, குடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியை சேர்த்து சுருங்க வதக்கி, பின் சர்க்கரை, எள்ளு பொடி மற்றும் புளியை சேர்த்து நன்கு கிளறி, இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications