Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் இந்த போண்டாவை ட்ரை பண்ணி பாருங்க..
Gothumai Maavu Inipu Bonda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் இனிப்பாக ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவும், வாழைப்பழமும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் போண்டா செய்து கொடுங்கள்.
இப்படி போண்டா செய்யும் போது, அந்த போண்டா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ருசியாக இருக்கும். மேலும் இந்த போண்டாவை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். இப்படியான எளிதில் செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசர காலத்தில் உதவியாக இருக்கும். முக்கியமாக செலவுகள் குறையும்.

உங்களுக்கு கோதுமை மாவு இனிப்பு போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை மாவு இனிப்பு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வாழைப்பழம் - 2
* நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* பேக்கிங் சோடா - 2 சிட்டிகை
* நெய் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வாழைப்பழங்களை துண்டுகளாக்கி சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் கோதுமை மாவை சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* பின்பு அதில் பேக்கிங் சோடா மற்றும் நெய் சேர்த்து நன்கு பிசைந்து
விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால்,
சுவையான கோதுமை மாவு இனிப்பு போண்டா தயார்.



Click it and Unblock the Notifications