Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கோதுமை மாவு வெச்சு.. எப்பவும் சப்பாத்தி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க...
Gothumai Adai Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்து சாப்பிடுவீர்களா? இப்படி கோதுமை மாவைக் கொண்டு எப்போதும் சப்பாத்தியை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை சப்பாத்தியைக் கொண்டு அடை செய்து சாப்பிடுங்கள். இந்த கோதுமை அடை வழக்கமாக செய்யும் அடையை விட வேறுபட்டது.
இந்த அடைக்கு ஒரு மசாலாவை அரைத்து சேர்க்க வேண்டும். இது தான் இந்த அடையின் சுவைக்கும், மணத்திற்கும் காரணம். அதோடு இப்படி செய்யும் அடைக்கு சைடு டிஷ் எதுவுமே தேவைப்படாது. இந்த அடையை இரவு நேரத்தில் மட்டுமின்றி, காலை உணவாகவும் உட்கொள்ளலாம். ஒருமுறை இந்த அடையை செய்தால், நிச்சயம் வாரம் ஒருமுறையாவது இந்த அடையை வீட்டில் செய்வீர்கள்.

உங்களுக்கு கோதுமை அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு..
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - சிறிய துண்டு
* வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
அடைக்கு...
* கோதுமை மாவு - 1 கப்
* பச்சரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* தண்ணீர் - சிறிது
* எள்ளு விதை - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், வரமிளகாய், பச்சை
மிளகாய், இஞ்சி மற்றும் வறுத்த வேர்க்கடலை சேர்த்து கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அத்துடன் பச்சரிசி
மாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி,
கறிவேப்பிலை, அரைத்த மிளகு சீரகம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய், மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, அடை மாவு பதத்திற்கு பிசைந்து
கொள்ள வேண்டும்.
* அதன் பின் பிசைந்த மாவை கொஞ்சம் எடுத்து, எண்ணெய் தடவிய வாழை
இலையில் வைத்து, கையில் எண்ணெய் தொட்டு, தட்டையாக பரப்பி விட
வேண்டும்.
* பின் அதன் மேல் சிறிது வெள்ளை எள்ளு விதைகளை தூவி அழுத்திவிட
வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய்
ஊற்றி, தட்டி வைத்துள்ள அடையை போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக
வேக வைத்து எடுத்தால், சுவையான கோதுமை அடை தயார்.



Click it and Unblock the Notifications