Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆட்டு தலைக்கறியை அடுத்தமுறை இந்த மாதிரி செய்யுங்க.. இட்லியுடன் சாப்பிட செமயா இருக்கும்...
Thala Kari Gravy Recipe In Tamil: ஞாயிற்றுக்கிழமை வந்தாலே காலை முதல் இரவு வரை வீட்டில் பலவிதமான அசைவ உணவுகளை சமைத்து மூக்குமுட்ட சாப்பிட்டு, விடுமுறையை பலர் சிறப்பாக கழிப்பார்கள். உங்கள் வீட்டிலும் இப்படி தானா?
இன்று காலை வீட்டில் இட்லிக்கு தலைக்கறியை செய்து கொடுக்க கேட்கிறார்களா? ஆனால் உங்களுக்கு தலைக்கறி சமைக்க வராதா? அப்படியானால் உங்களுக்காக தலைக்கறிலை மிகவும் ஈஸியாக மற்றும் சுவையாக சமைப்பது எப்படி என்று கொடுத்துள்ளோம். இந்த தலைக்கறி கிரேவி இட்லியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு தலைக்கறி கிரேவி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தலைக்கறி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்வதற்கு...
* ஆட்டு தலைக்கறி - 1/2 கிலோ
* உப்பு - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மசாலாவிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 4
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* பட்டை - 2 இன்ச்
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி - சிறு துண்டு
* பூண்டு - 7
* சின்ன வெங்காயம் - 1 கையளவு
* கொத்தமல்லி - சிறிது
* துருவிய தேங்காய் - 1/4 கப்
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 1
* சின்ன வெங்காயம் - 1 கையளவு
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் தலைக்கறியை வாங்கி வந்து அதை நீரில் நன்கு 5 முறை
கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பின் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள்
சேர்த்து கிளறி, மீண்டும் ஒரு 3 முறை நன்கு தலைக்கறியை கழுவி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, மிளகு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வறுக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி மற்றும் வெங்காயத்தை
சேர்த்து, நன்கு வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு, அதை ஒரு கிண்ணத்தில்
போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய வெங்காயம் மற்றும் துருவிய தேங்காயை
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதே குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்
சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும்
மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு கழுவி வைத்துள்ள தலைக்கறியை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, கிரேவிக்கு தேவையான
அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கினால்,
சுவையான ஆட்டு தலைக்கறி கிரேவி தயார்.
Image Courtesy: Flavours Of My Kitchen



Click it and Unblock the Notifications