Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கோவா ஸ்டைல் சூப்பரான தேங்காய் சட்னி ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்...!
Goan Coconut Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலையில் அல்லது இரவில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசை தான் டிபனாக இருக்குமா? அவற்றிற்கு எப்போதும் உங்கள் வீட்டில் அடிக்கடி தேங்காய் சட்னிதான் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் தேங்காய் சட்னியை செய்வீர்களா? ஒரே மாதிரியாக தேங்காய் சட்னி சாப்பிட்டு போரடித்து விட்டதா?
அடுத்தமுறை டிபனுக்கு தேங்காய் சட்னி அரைக்கும் போது கோவா ஸ்டைல் தேங்காய் சட்னியை அரைத்துப் பாருங்கள். கோவா என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சரக்குகளும், கண்ணனுக்கு குளிர்ச்சியான கடற்கரைகளும்தான். ஆனால் கோவாவில் பல சுவையான உணவுகளும் கிடைக்கக்கூடும். அப்படி கிடைக்கக்கூடிய சுவையான உணவுகளில் ஒன்றுதான் இந்த கோவன் ஸ்டைல் தேங்காய் சட்னி.

வழக்கமான தேங்காய் சட்னியில் சேர்க்கப்படும் பொருட்களே இதில் இருந்தாலும் இந்த சட்னியை கூடுதல் ஸ்பெஷலாக மாற்றுவது அவற்றுடன் சேர்க்கப்படும் பிற பொருட்கள்தான். இந்த சட்னியில் கூடுதலாக சேர்க்கப்படும் பொருட்கள் அதன் சுவையை மட்டுமல்ல அதன் சத்துக்களையும் அதிகரிக்கும்.மேலும் சட்னிக்கு கண்கவர் பச்சை நிறத்தைக் கொடுக்கும்.
உங்களுக்கு இந்த கோவா ஸ்டைல் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவா ஸ்டைல் தேங்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் துருவிய தேங்காய்
- 1 கப் கொத்தமல்லி
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் மிளகு
- 2 ஸ்பூன் சர்க்கரை( தேவைப்பட்டால் குறைத்துக் கொள்ளலாம்)
- 1 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு அல்லது 1 ஸ்பூன் புளிச்சாறு
- 3 பச்சை மிளகாய்
- 1 பெரிய வெங்காயம்
- 5 பூண்டு பற்கள்
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் 2 ஸ்பூன்
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 வர மிளகாய்
- அரை ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- முதலில் தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும், வெங்காயத்தை குத்து மதிப்பாக நறுக்கிக் கொள்ளவும். அதேபோல கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காயை தேங்காயைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் போவும்.
- தேவையான அளவு உப்பும், சர்க்கரையும் சேர்த்து சட்னியை கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் துருவிய தேங்காயையும், 2 ஸ்பூன் தண்ணீரையும் சேர்த்து அரைக்கவும்.
- இந்த சட்னி கெட்டியாக இருந்ததால்தான் நன்றாக இருக்கும், எனவே தண்ணீரை மிகவும் குறைவாகப் பயன்படுத்தவும்.
- அவ்வளவுதான் சட்னி ரெடி. இதில் அனைத்து பொருட்களும் பச்சையாக சேர்க்கப்பட்டிருப்பதால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் இது 5 நாட்கள் வரை கூட கெட்டுப்போகாமல் இருக்கும்.
- இந்த சுவையான சட்னியை சாண்ட்விச் செய்ய பயன்படுத்தலாம் அல்லது மீனில் மசாலாவாக தடவி வறுத்து சாப்பிடலாம்.
- நீங்கள் இட்லி, தோசையுடன் சாப்பிட விரும்பினால் இந்த சட்னியை தாளிக்கவும்.
- - சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் வர மிளகாயை சேர்க்கவும்.
- பின்னர் அதில் கறிவேப்பிலை, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்த தக்காளியை இதில் கொட்டி நன்கு கிளறி விடவும்.
- இதை ஒரு மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- உப்பு மற்றும் வெல்லத்தை சரி பார்த்து நன்கு சுண்டியவுடன் அடுப்பை அணைக்கவும்.
- இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications