Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கோவா ஸ்டைல் சிக்கன் கறி ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு பாருங்க... டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்...!
Goa Style Chicken Curry Recipe in Tamil: நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை வருவதே நான் வெஜ் உணவை விரும்பி சாப்பிடத்தான். பெரும்பாலான வீடுகளில் சண்டே காலையிலேயே சிக்கன் அல்லது மட்டன்தான். இதில் சுவையிலும், விலையிலும் மட்டனை விட சிக்கனே பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. அதேசமயம் சமைப்பதிலும் மட்டனை விட சிக்கன் மிகவும் எளிமையானது.
இந்த வாரம் சிக்கன் வாங்கினால் அதை வழக்கமான முறையில் சமைக்காமல் கோவா ஸ்டைலில் சூப்பரான கிரேவி செய்து பாருங்கள். கோவா என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது கலர் கலரான சரக்குகளும், கண்ணனுக்கு குளிர்ச்சியான கடற்கரைகளும்தான். ஆனால் கோவாவில் பல சுவையான உணவுகளும் கிடைக்கக்கூடும். அப்படி கிடைக்கக்கூடிய சுவையான உணவுகளில் ஒன்றுதான் இந்த கோவன் ஸ்டைல் சிக்கன் கறி. இந்த கோவா ஸ்டைல் சிக்கன் தோசை, சப்பாத்திக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த கோவா ஸ்டைல் சிக்கன் கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவா ஸ்டைல் சிக்கன் கறியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - அரை கிலோ
- பெரிய வெங்காயம்-1 மெல்லியதாக நறுக்கியது
- தக்காளி - 3 பெரியதாக நறுக்கியது
- எண்ணெய்-3 டேபிள் ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- வினிகர்-2 டீஸ்பூன்
மசாலா அரைக்க:
- இஞ்சி - 1 ஸ்பூன் பொடியாக நறுக்கியது
- பூண்டு - 8 பெரிய பல்
- இலவங்கப்பட்டை - 1 இன்ச்
- மல்லி விதைகள் - 2 ஸ்பூன்
- சீரகம் - 2 ஸ்பூன்
- வர மிளகாய் - 4
- கிராம்பு - 4
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- புளிக்கரைசல் - சிறிதளவு
- சர்க்கரை - 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 2
செய்முறை:
- முதலில் ஒரு மிக்சி ஜாரில் இஞ்சி, உரித்த பூண்டு, இலவங்கப்பட்டை, கிராம்பு, சீரகம், தனியா, வர மிளகாய், புளி, கிராம்பு மற்றும் மிளகை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்த மசாலா விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
- தக்காளி நன்றாக வெந்ததும் சிக்கனைப் போட்டு அனைத்து பக்கங்களும் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
- பின் அரை கப் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
- சிக்கன் நன்றாக வெந்ததும் அதில் 2 ஸ்பூன் வினிகரை சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்தால் சுவையான கோவன் ஸ்டைல் சிக்கன் கறி ரெடி.
- இதை சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications