Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஒருடைம் டீயை போடும் போது இந்த 2 பொருளை சேர்த்து செய்யுங்க.. ருசியாவும் இருக்கும்.. நெஞ்சு சளியும் முறியும்..
Ginger Pepper Tea Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் டீ பிரியர்களா? இதனால் உங்கள் வீட்டில் அடிக்கடி டீ போடுவீர்களா? எப்போதும் ஒரே சுவையில் டீ போடாமல் அவ்வப்போது சற்று வித்தியாசமாக செய்தால், இன்னும் அற்புதமாக இருக்கும் அல்லவா?
அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் சளியால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்களா? அப்படியானால் அப்போது அவர்களுக்கு இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து டீ போட்டு கொடுங்கள். இந்த டீ சற்று வித்தியாசமான சுவையில் இருந்தாலும், நெஞ்சு சளியை முறிக்கும். அதோடு, இந்த டீ இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்தும் நல்ல நிவாரணத்தை அளிக்கும்.

உங்களுக்கு இஞ்சி மிளகு டீயை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இஞ்சி மிளகு டீ ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* இஞ்சி பேஸ்ட் அல்லது துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* டீத்தூள் - 1 டீஸ்பூன்
* பால் - 1 டம்ளர்
* சர்க்கரை - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டம்ளர்
நீரை ஊற்ற வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட் மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகுத்
தூள் சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 1 டீஸ்பூன் டீத்தூள் சேர்த்து கலந்து, 3-4 நிமிடம்
நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இப்போது டிகாஷன் தயார்.
* பிறகு அதில் 1 டம்ளர் பாலை ஊற்றி நன்கு 2-3 நிமிடம் மிதமான தீயில்
வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கி வடிகட்டினால், சுவையான இஞ்சி மிளகு டீ தயார்.



Click it and Unblock the Notifications