Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
1/4 கப் இஞ்சி இருந்தா இந்த மாதிரி சட்னி செய்யுங்க... டேஸ்டாவும் இருக்கும்... 2 மாசமானாலும் கெட்டுப்போகாது...!
Ginger Chutney Recipe in Tamil: தினமும் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி அல்லது சாம்பார் என்று ஒரே மாதிரி சைடிஷ் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? வீட்டில் இஞ்சி உள்ளதா? அப்படியானால் இஞ்சி சட்னி அல்லது தொக்கை செய்யுங்கள். இந்த இஞ்சி சட்னி சாப்பிடுவதற்கு சுருக்குனு சூப்பராக இருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இஞ்சியை பொதுவாக சட்னியில் மிகவும் குறைவான அளவு மட்டுமே சேர்ப்போம், ஆனால் இஞ்சியை வைத்தே சுவையான சட்னி செய்யலாம் என்பது பலரும் அறியாதது. இந்த இஞ்சி சட்னி இட்லி, தோசை, ஊத்தாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த சட்னியை சாப்பிடுவது உடனடி தீர்வைக் கொடுக்கும், மேலும் இது எடையைக் குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு இஞ்சி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இஞ்சி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையானப் பொருட்கள்:
- 1/4 கப் நறுக்கிய இஞ்சி
- 5 வர மிளகாய்
- 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- சிறிய எலுமிச்சை அளவு புளி
- 1 கொத்து கறிவேப்பிலை
- கால் ஸ்பூன் மஞ்சள்
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 1/2 கப் வெல்லம்
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 1 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய்
- 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு
- 1/2 டேபிள் ஸ்பூன் சீரகம்
- 1/2 டேபிள் ஸ்பூன் எள்
- சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை:
- இஞ்சியை நன்றாக கழுவி தோல் சீவிக்கொண்டு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, அதில் சிவப்பு மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். உங்கள் காரத்திற்கு ஏற்ப வர மிளகாயின் எண்ணிக்கையை கூட்டியும், குறைத்தும் கொள்ளலாம்.
- கடலை பருப்பையும், உளுத்தம்பருப்பையும் சேர்த்து, குறைந்த தீயில் சிறிது பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும்.
- அடுத்து நறுக்கிய இஞ்சியைச் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
- சுத்தம் செய்த புளியை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும், இஞ்சி மென்மையாக மாறும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- அடுத்து சிறிது கறிவேப்பிலை, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து, மிதமான தீயில் தொடர்ந்து வறுக்கவும்.
- பின்னர் வெல்லம் சேர்க்கவும். உங்கள் சுவைக்கேற்ப வெல்லத்தின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.
- பின்னர் உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, அனைத்தையும் ஒரு நிமிடம் நன்றாகக் கிளறவும். புளி மற்றும் வெல்லத்தை எண்ணெயில் வதக்குவது சட்னிக்கு நல்ல சுவையைத் தரும். மேலும் இது புளி மற்றும் வெல்லத்தை மென்மையாக்கும்.
- சட்னி ஆற வரை காத்திருந்து மிக்சி கிரைண்டரில் சேர்த்து அரைக்கவும். இந்த சட்னியை நீண்ட காலம் சேமிக்க விரும்பினால் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் சுற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், எள் மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும்.
- இந்த சட்னி தண்ணீர் சேர்க்காமல் வைத்திருந்தால் 2 மாதங்கள் வரை நன்றாக இருக்கும். இது இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
