For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாக்கை சப்பு கொட்டச் செய்யும் கடலை மாவு சப்ஜி- ராஜஸ்தானி ஸ்பெஷல்!!

கடலை மாவு சப்ஜி ராஜஸ்தானி ஒரு ஸ்பெஷல் கறி ரெசிபி ஆகும். இதில் முக்கியமாக கடலை மாவு பயன்படுத்தப்படுகிறது.

Posted By: Lekhaka
|

கடலை மாவு சப்ஜி ராஜஸ்தானி ஒரு ஸ்பெஷல் கறி ரெசிபி ஆகும். இதில் முக்கியமாக கடலை மாவு பயன்படுத்தப்படுகிறது. இந்த சப்ஜி நிறைய வீ்ட்டில் முக்கிய உணவாக செய்யப்படுகிறது. இதில் கடலை மாவில் அப்படியே காரசாரமான கலவைகளின் பொருட்களோடு எண்ணெயால் பொரித்தெடுக்கப்படுகிறது. இது ஒரு அற்புதமான சுவையோடு மற்றும் க்ரீமி தயிரால் செய்யப்படுகிறது. இதில் உள்ள ப்ரைடு கட்டி மற்றும் தஹி கரி உங்களுக்கு கூடுதல் சுவையை கொடுக்கும்.

இந்த கட்டியை முன்னாடியே தயாரித்து பிரிட்ஜில் வைத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். பிறகு தேவைப்படும் போது இந்த கட்டியை எடுத்து கிரேவியில் போட்டு விடலாம். நாம் ப்ரஷ்ஷாக தயாரிப்பதை மாதிரி இந்த கட்டி முறையும் சுவை மிகுந்ததாக இருக்கும்.

நீங்கள் தீவிர டயட்டை மேற்கொண்டால் இந்த கட்டியை வேக வைத்தும் பயன்படுத்தலாம்.

இந்த தகி கடலை மாவு சப்ஜி ராஜஸ்தானி பாரம்பரிய உணவாகும். இதை ரொட்டி மற்றும் அரிசி போன்றவற்றிற்கு சைடிஸ் ஆக பயன்படுகிறது.

இந்த கடலை மாவு கடலை மாவு சப்ஜி வீட்டிலேயே எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம். இதை செய்வதற்கு எந்த சிரமமும் ஏற்படாது. கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பயன்படுத்தி இதை விரைவாகவும் எளிதாகவும் வீட்டிலேயே செய்து ருசிக்கலாம்.

சரி வாங்க இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

நீங்கள் மற்ற ராஜஸ்தானி ரெசிபிகளையும் செய்ய ஆசைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வகைகளை செய்து மகிழலாம்.

 gatte ki sabzi recipe
கடலை மாவு சப்ஜி ரெசிபி /தகி கடலை மாவு சப்ஜி /ராஜஸ்தானி கட்டி ஹி ஷாக் /பீசன் கடலை மாவு சப்ஜி ரெசிபி
கடலை மாவு சப்ஜி ரெசிபி /தகி கடலை மாவு சப்ஜி /ராஜஸ்தானி கட்டி ஹி ஷாக் /பீசன் கடலை மாவு சப்ஜி ரெசிபி
Prep Time
15 Mins
Cook Time
25M
Total Time
40 Mins

Recipe By: மீனா பந்தரி

Recipe Type: சைடிஸ்

Serves: 2-3

Ingredients
  • கடலை மாவு - 1 கப்

    தண்ணீர் - 21/4 கப்

    உப்பு - தேவைக்கேற்ப

    சிவப்பு மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் +பொரிப்பதற்கு

    வெங்காயம் - 1

    வெள்ளைப் பூண்டு (தோலூரித்தது) - 4 பல்

    தயிர் - 1 கப்

    கொத்தமல்லி பொடி - 4 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

    பெருங்காயம் - கொஞ்சம்

Red Rice Kanda Poha
How to Prepare
    1. கடலை மாவை ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்
    2. ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்
    3. இதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கைகளால் நன்றாக கலக்கவும்
    4. 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசையவும்.
    5. மாவை இரண்டு பகுதிகளாக பிரித்து நீளமான உருளை வடிவில் உருட்டவும்
    6. அதை அரை இஞ்ச் அளவிற்கு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
    7. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பொரிப்பதற்கு சூடுபடுத்த வேண்டும்.
    8. கட்டி துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்க வேண்டும்.
    9. அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஓரமாக வைத்து விடவும்
    10. வெங்காயத்தை எடுத்து மேல் மற்றும் கீழ் பகுதிகளை நீக்கி விடவும்
    11. பிறகு அரையாக வெட்டி நீளவாக்கில் வெங்காயத்தை வெட்ட வேண்டும்
    12. நன்றாக உதிர்த்து மீடியமான வடிவில் வைத்து கொள்ளவும்
    13. அதை ஒரு மிக்ஸி சாரிற்கு மாற்றிக் கொள்ளவும்
    14. அதனுடன் பூண்டு சேர்க்கவும்
    15. இதை நன்றாக வழுவழுப்பாக அரைத்து கொள்ளவும்
    16. ஒரு கப் தயிரை எடுத்து கொள்ளவும்
    17. பிறகு கொத்தமல்லி பொடி மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்
    18. கொஞ்சம் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்
    19. நன்றாக கிளறி தனியாக வைத்து விடவும்
    20. பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை சூடான கடாயில் ஊற்ற வேண்டும்
    21. பெருங்காயம் சேர்க்கவும்
    22. அதனுடன் அரைத்த வெங்காயத்தை சேர்க்கவும்
    23. 1-2 நிமிடங்கள் அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்
    24. தயிர் கலவையை சேர்க்க வேண்டும்
    25. 2-3 நிமிடங்கள் எண்ணெய் பிரியும் வரை சமைக்க வேண்டும்
    26. அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்
    27. மூடியை கொண்டு மூடி 3-4 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
    28. மூடியை திறந்து பொரித்த கட்டியை சேர்க்கவும்
    29. மூடியை கொண்டு மூடி இரண்டு நிமிடங்கள் சமைக்க வேண்டும்
    30. பிறகு பெளலிற்கு மாற்றி சூடாக பரிமாறவும்
Instructions
  • 1. மாவை பிசையும் போது கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கொண்டால் கட்டி ரெம்ப மென்மையாக இருக்கும்.
  • 2. உருளைவடிவ துண்டுகளின் தடிமன் இன்ச் அளவில் இருக்க வேண்டும்
  • 3. பொரித்த கட்டி ஆறியதும் பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளலாம். வாரம் அல்லது இரண்டு நாட்களுக்கு கூட இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • 4. கிரேவியின் பதத்தை பொறுத்து தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 கப்
  • கலோரிகள் - 90
  • கொழுப்பு - 4 கிராம்
  • புரோட்டீன் - 4 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 9 கிராம்
  • நார்ச்சத்து - 2 கிராம்

படத்துடன் செய்முறை விளக்கம் :கடலை மாவு சப்ஜி ரெசிபி செய்வது எப்படி

1. கடலை மாவை ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்

2. ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்

3. இதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கைகளால் நன்றாக கலக்கவும்

4. 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசையவும்.

5. மாவை இரண்டு பகுதிகளாக பிரித்து நீளமான உருளை வடிவில் உருட்டவும்

6. அதை அரை இஞ்ச் அளவிற்கு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

7. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பொரிப்பதற்கு சூடுபடுத்த வேண்டும்.

8. கட்டி துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்க வேண்டும்.

9. அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஓரமாக வைத்து விடவும்

10. வெங்காயத்தை எடுத்து மேல் மற்றும் கீழ் பகுதிகளை நீக்கி விடவும்

11. பிறகு அரையாக வெட்டி நீளவாக்கில் வெங்காயத்தை வெட்ட வேண்டும்

12. நன்றாக உதிர்த்து மீடியமான வடிவில் வைத்து கொள்ளவும்

13. அதை ஒரு மிக்ஸி சாரிற்கு மாற்றிக் கொள்ளவும்

14. அதனுடன் பூண்டு சேர்க்கவும்

15. இதை நன்றாக வழுவழுப்பாக அரைத்து கொள்ளவும்

16. ஒரு கப் தயிரை எடுத்து கொள்ளவும்

17. பிறகு கொத்தமல்லி பொடி மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்

18. கொஞ்சம் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்

19. நன்றாக கிளறி தனியாக வைத்து விடவும்

20. பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை சூடான கடாயில் ஊற்ற வேண்டும்

21. பெருங்காயம் சேர்க்கவும்

22. அதனுடன் அரைத்த வெங்காயத்தை சேர்க்கவும்

23. 1-2 நிமிடங்கள் அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்

24. தயிர் கலவையை சேர்க்க வேண்டும்

25. 2-3 நிமிடங்கள் எண்ணெய் பிரியும் வரை சமைக்க வேண்டும்

26. அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்

27. மூடியை கொண்டு மூடி 3-4 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

28. மூடியை திறந்து பொரித்த கட்டியை சேர்க்கவும்

29. மூடியை கொண்டு மூடி இரண்டு நிமிடங்கள் சமைக்க வேண்டும்

30. பிறகு பெளலிற்கு மாற்றி சூடாக பரிமாறவும்

[ 4.5 of 5 - 108 Users]
English summary

Gatte Ki Sabzi Recipe | Dahi Gatte Ki Sabzi | Rajasthani Gatte Ki Saag | Besan Gatte Ki Sabzi Recipe

Gatte ki sabzi is a traditional Rajasthani curry that is commonly prepared in most households.
Story first published: Tuesday, November 7, 2017, 15:25 [IST]
Desktop Bottom Promotion