Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
சிக்கனை வாங்குனா ஒருவாட்டி பூண்டு மிளகு சிக்கன் வறுவலை ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க..
Garlic Pepper Chicken Varuval Recipe In Tamil: வார விடுமுறை நாட்களில் தான் வாய்க்கு ருசியாக சமைத்து அதை பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட முடியும். இந்த வார விடுமுறை நாளில் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியிருந்தால், அதுவும் அந்த சிக்கனை கொண்டு வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைத்தால், பூண்டு மிளகு சிக்கன் வறுவலை செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் வறுவல் ரசம் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு பூண்டு மிளகு சிக்கன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு மிளகு சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/4 கிலோ
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* மல்லி - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 3
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 10-12 பல்
* சின்ன வெங்காயம் - 6-7
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு 2-3 நிமிடம் கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அந்த கழுவிய சிக்கனுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகுத் தூள்,
எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து சிறிது நேரம் ஊற
வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் மல்லி, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய்
சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு
மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நல்ல மணம் வரும்
வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள
மசாலாவை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, நன்கு 2 நிமிடம்
கிளறி விட்டு, பின் 3 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு தூவி மூடி வைத்து
10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, நீர் ஓரளவு வற்றியதும்,
கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்துவிட்டு, சிறிது நேரம் மூடி
வைத்து, பின் பரிமாறினால், சுவையான பூண்டு மிளகு சிக்கன் வறுவல்
தயார்.



Click it and Unblock the Notifications