Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த பூண்டு கார சட்னியை செய்யுங்க.. 2 நாளைக்கு சட்னி பிரச்சனையே இருக்காது... இட்லி தோசைக்கு செமயா இருக்கும்..
Garlic Kara Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? உங்கள் வீட்டில் பூண்டும், சின்ன வெங்காயமும் இருக்கா? அப்படியானால் அந்த இரண்டு பொருட்கள் இருந்தால், அட்டகாசமான சுவையில் ஒரு சட்னியை செய்யலாம். அது தான் பூண்டு கார சட்னி.
இந்த சட்னி இட்லி, தோசைக்கு அற்புதமாக இருக்கும். மேலும் இதில் நல்லெண்ணெய் சேர்ப்பதால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு பூண்டு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 8-10 (காரத்திற்கு ஏற்ப)
* காஷ்மீரி மிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 150 கிராம்
* பூண்டு - 150 கிராம்
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் காஷ்மீரி வரமிளகாய்
சேர்த்து நன்கு வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு
நிறம் மாறி வரும் வரை மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளியை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் பச்சை வாசனை போக
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு மிளகாயை அரைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு
சேர்த்து நீர் சேர்க்காமல் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை ஊற்றி, 2 நிமிடம் கிளறி
விட்டு வேக வைத்து இறக்கினால், சுவையான பூண்டு கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications