Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பூண்டு தால்
உங்கள் வீட்டில் துவரம் பருப்பு மற்றும் பூண்டு இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான பூண்டு தால் செய்யுங்கள். இந்த தால் சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் மிகவும் ஈஸியான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் உங்கள் வீட்டில் துவரம் பருப்பு மற்றும் பூண்டு இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான பூண்டு தால் செய்யுங்கள். இந்த தால் சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு பூண்டு தால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* புளி பேஸ்ட் - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 5
* பூண்டு - 10 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து பருப்பை குளிர வைக்க வேண்டும்.
* அதற்குள் பச்சை மிளகாயை வாணலியில் போட்டு சிறிது வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில், வேக வைத்த பருப்பு, பச்சை மிளகாய், பூண்டு, புளி பேஸ்ட், உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பருப்புடன் சேர்த்து கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பூண்டு தால் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications