Latest Updates
-
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
கர்நாடகா ஸ்பெஷல் பெல்லுளி சட்னி..1 பூண்டும், 1 கப் தேங்காயும் இருந்தா போதும் இட்லி, தோசைக்கு செம சைடிஷ் ரெடி!
Garlic Coconut Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னிகள் அரைத்து போரடித்து விட்டதா? புதுசா ஏதாவது சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? அப்ப நம்ம அண்டை மாநிலமான கர்நாடகா ஸ்டைல் சைடிஷ்களை ட்ரை பண்ணி பாருங்க. வழக்கமான சட்னிகளுக்கு மாற்றாக சற்று காரமான அதே சமயம் புளிப்பான சட்னியை செய்ய வேண்டுமா? அப்படியானால் கர்நாடகா ஸ்டைல் வறுத்த பூண்டு சட்னியை ட்ரை செய்து பாருங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் பூண்டு சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும். இதை சட்னியாக மட்டுமின்றி சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
இந்த காரமான பூண்டு சட்னி அல்லது தொக்கு பூண்டு, தேங்காய் மற்றும் வீட்டிலுள்ள எளிய பொருட்களையும் வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து விட்டால் அதை நீண்ட நாட்கள் வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு சுவையான வறுத்த பூண்டு சட்னியை எப்படி வடை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்த பூண்டு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 நடுத்தர அளவு பூண்டு
- 4 வர மிளகாய்
- 1 கப் துருவிய தேங்காய்
- 1 சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- 1 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 வர மிளகாய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 4 கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் எண்ணெய்
செய்முறை:
- பூண்டை தோலுரித்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- பின்னர் வர மிளகாயை போட்டு வதக்கவும்.
- மிளகாயை வறுத்தவுடன் நறுக்கிய பூண்டை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
- நறுக்கிய பூண்டுகள் லேசாகப் பழுப்பு நிறமாகும் வரை வறுக்கவும். அவற்றை அதிகமாக வறுத்துவிட வேண்டாம்.
- ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து, அதில் ஒரு கப் துருவிய தேங்காயைச் சேர்க்கவும்.
- அதைத்தொடர்ந்து உப்பு மற்றும் புளியை சேர்க்கவும்.
- பின்னர் வறுத்த மிளகாய் மற்றும் பூண்டை சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி விடவும்.
- - சட்னியை தாளிக்க ஒரு கரண்டியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
- பின்னர் கடுகு சேர்த்து, அது வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
- பின்னர் வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- வர மிளகாய் நிறம் மாறியதும் அதை சட்னி மீது கொட்டி நன்கு கிளறவும்.
- அவ்வளவுதான் கர்நாடகா பேமஸ் பெல்லுளி சட்னி ரெடி. இது சூடான இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











