Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஹோட்டல் ஸ்டைல் கார்லிக் சிக்கன் ரெசிபி... இப்படி பண்ணுனா டேஸ்ட் ஹோட்டலை விட சூப்பராக இருக்கும்...!
Garlic Chicken Recipe in Tamil: சண்டே என்றாலே பெரும்பாலான வீடுகளில் சிக்கன் அல்லது மட்டன்தான். இதில் சுவையாலும், விலையாலும் மட்டனை விட சிக்கன் பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. அதேசமயம் சமைப்பதிலும் மட்டனை விட சிக்கன் மிகவும் எளிமையானதாக இருக்கிறது.
சிக்கனை வழக்கமான ஸ்டைலில் சமைப்பதற்குப் பதில் வித்தியாசமாக ஹோட்டல் ஸ்டைலில் சமைக்கும் போது வீட்டிலுள்ள அனைவரும் அதை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் ஹோட்டலில் சமைக்கும் கார்லிக் சிக்கனை வீட்டிலேயே மிகவும் எளிமையாக சமைக்கலாம். இதை சரியாக செய்தால் ஹோட்டல் சுவையை விட சிறப்பாக இருக்கும். இந்த பதிவில் ஹோட்டல் ஸ்டைல் கார்லிக் சிக்கனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- அரை கிலோ எலும்பில்லாத சிக்கன்
- 2 ஸ்பூன் புளிப்பில்லாத தயிர்
- உப்பு தேவையான அளவு
- அரை ஸ்பூன் மிளகுத்தூள்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- கால் ஸ்பூன் சீரகம்
- 1 நறுக்கிய வெங்காயம்
- 5 வர மிளகாய் அல்லது 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 5 பூண்டு பல் நசுக்கியது
- 1 ஸ்பூன் வினிகர்
- அரை ஸ்பூன் சர்க்கரை
- தண்ணீர் தேவையான அளவு
- கொத்தமல்லி இலை சிறிதளவு
- அரை எலுமிச்சை துண்டு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் சிக்கன், தயிர், உப்பு மற்றும் மிளகு சேர்த்து கலக்கவும். இதை மூடி வைத்து, குறைந்தபட்சம் 30 நிமிடம் ஊற வைக்கவும் அல்லது இரவே குளிர்சாதன வைப்பது நல்லது. இது இறைச்சியை மென்மையாக்க உதவும்.
- மிளகாய்த்தூள், பூண்டு, சர்க்கரை, உப்பு, வினிகர் மற்றும் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டை தயாரித்துக் கொள்ளவும்.
- சிக்கனில் இருக்கும் தண்ணீரை அகற்றி விட்டு அதில் தயாரித்து வைத்த சாஸை ஊற்றி கலக்கவும். இதையும் குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லது.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் சீரகத்தை சேர்க்கவும். அது வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- இப்போது சிக்கனை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் அதிக தீயில் வதக்கவும். பின்னர் தீயை மிதமாகக் குறைத்து, சிக்கன் மென்மையாகும் வரை, சாஸ் சிக்கன் மீது நன்றாக ஒட்டும் வரை சமைக்கவும். பாத்திரம் அடி பிடிக்காமல், மூடி வைத்து குறைந்த தீயில் சமைக்கவும்.
- ருசி பார்த்து உப்பு, சர்க்கரை அல்லது மிளகு ஆகியவற்றை ருசிக்கேற்ப சரிசெய்யவும். நீண்ட நேரம் வறுக்கும்போது, சாஸ் அதிக நறுமணமாகவும் சுவையாகவும் மாறும். சிக்கன் நன்கு வெந்ததும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும். சிக்கனை அடிபிடிக்காமல் கிளறினால் சூப்பரான கார்லிக் சிக்கன் ரெடி.
- இது பிரியாணி மற்றும் சாம்பார் சாதத்திற்கு சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications