Just In
- 47 min ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 1 hr ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 2 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 3 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Movies Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: இனிப்பு ரவா கொழுக்கட்டை
இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி அன்று நீங்கள் அட்டகாசமான சுவையைக் கொண்ட கொழுக்கட்டை செய்ய நினைத்தால், இனிப்பு ரவா கொழுக்கட்டை செய்யுங்கள். இந்த கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம்.
விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டது. இந்த விழாவின் நாயகனான விநாயகருக்கு கொழுக்கட்டை என்றால் பிடிக்கும். எனவே இந்நாளில் விநாயகருக்கு படைக்க பலவிதமான கொழுக்கட்டைகளை செய்வோம். இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி அன்று நீங்கள் அட்டகாசமான சுவையைக் கொண்ட கொழுக்கட்டை செய்ய நினைத்தால், இனிப்பு ரவா கொழுக்கட்டை செய்யுங்கள். இந்த கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
உங்களுக்கு இனிப்பு ரவா கொழுக்கட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இனிப்பு ரவா கொழுக்கட்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* வெல்லம் - 3/4 கப்
* தண்ணீர் - 2 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெல்லத்தை நீரில் போட்டு அடுப்பில் வைத்து கரைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், ரவையைப் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வெல்ல நீரை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து, அதில் துருவிய தேங்காயைப் போட்டு, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் வறுத்த ரவையை சேர்த்து கிளறி, அத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அந்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து, 5-8 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான இனிப்பு ரவா கொழுக்கட்டை தயார்.
Image Courtesy: yummytummyaarthi