Latest Updates
-
நவம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன் ரெசிபி - இந்த தீபாவளிக்கு இதை செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
2026-ல் உலகின் மிகவும் ஆபத்தான டாப் 10 நாடுகள் - இந்த நாடுகளில் மக்கள் வாழ்வதே ரொம்ப கஷ்டம் -
உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
சூரியன் விருச்சிக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா -
முட்டையை இந்த மாதிரி வித்தியாசமா புலாவ் செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியை விட அட்டகாசமாக இருக்கும் -
இந்திய சினிமாவின் பிறப்பிடம் என்று அழைக்கப்படும் நகரம் எது? இந்திய சினிமாவின் தந்தை யார் தெரியுமா? -
1/2 கிலோ மட்டன் வாங்குனா இந்த மாதிரி கிராமத்து ஸ்டைலில் பச்சை மிளகாய் தொக்கு செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
3/4 கிலோ சிக்கனை வாங்குனா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம்
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க
Ganesh Chaturthi Special Sojji Appam Recipe in Tamil: இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி வரப்போகிறது. இந்த நாளில் முழுமுதற் கடவுளான விநாயகருக்கு பிடித்த உணவுகளை வைத்து அவரை வழிபடுவது நமது பாரம்பரியமாகும். விநாயகருக்கு பிடித்த உணவு என்று வரும்போது அதில் முதலிடத்தில் இருப்பது கொழுக்கட்டைதான். ஆனால் இந்த நாளில் வேறுசில பலகாரங்களையும் செய்து நமது பிள்ளையாரை வழிபடலாம்.

அப்படி இந்த விநாயகர் சதுர்த்திக்கு விநாயகருக்கு புதிதாக ஏதாவது இனிப்பு செய்து வழிபட விரும்பினால் இந்த ஐயங்கார் ஸ்டைல் சொஜ்ஜி அப்பத்தை முயற்சி செய்து பாருங்கள். இந்த சொஜ்ஜி அப்பம் மதுரை, காரைக்குடி போன்ற தமிழ்நாட்டில் உணவுக்கு புகழ்பெற்ற மாவட்டங்களில் மிகவும் பிரபலமானதாகும். இந்த விநாயகர் சதுர்த்திக்கு புதுசா ஏதாவது செய்ய விரும்பினால் இந்த பலகாரத்தை செய்யுங்க.
உங்களுக்கு இந்த சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் சொஜ்ஜி அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சொஜ்ஜி அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் மைதா மாவு
-1 சிட்டிகை சமையல் சோடா
- 3 ஸ்பூன் நெய்
- 15 முந்திரிப் பருப்பு
- 1 கப் ரவை
- 1 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 2 கப் தண்ணீர்
- 2 கப் சர்க்கரை
- பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்
-1 சிட்டிகை ஏலக்காய் தூள்
செய்முறை:
- ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மற்றும் பேக்கிங் சோடா மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, மாவாகப் பிசையவும்.
- நெய் சேர்த்து, மென்மையான மாவாகப் பிசையவும்.
- ஒரு வாணலியில் 1 ஸ்பூன் நெய்யைச் சூடாக்கவும். அதில் முந்திரிப் பருப்பைச் சேர்த்து, லேசான பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பின்னர் வாணலியில் ரவையைச் சேர்க்கவும். ரவை பொன்னிறமாகி வாசனை வரும் வரை வறுக்கவும்.
- பின்னர் துருவிய தேங்காயைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- இந்த நிலையில் வாணலியில் 2 கப் சுடுநீரைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கட்டிகள் சேராமல் இருக்கத் தொடர்ந்து கிளறிக்கொண்டே, ரவை மென்மையாகும் வரை சமைக்கவும்.
- ரவை வெந்தவுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்துக் கிளறவும்.
- சர்க்கரை நன்கு கரைந்து ரவை கலவை கெட்டியாகும் வரை கிளறவும். பிறகு 1 ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- இந்த கேசரியை நன்றாக ஆறவிடவும். பின்னர் அதிலிருந்து சின்ன சின்ன உருண்டைகளைச் செய்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
- இப்போது பிசைந்து வைத்த மைதா மாவை எடுத்து, அதிலிருந்தும் எலுமிச்சை அளவு உருண்டைகளைச் செய்து ஒரு தட்டில் வைக்கவும்.
- ஒரு மாவு உருண்டையை எடுத்துச் சிறிய பூரி போலத் தேய்க்கவும். அதன் நடுவில் கேசரி உருண்டையை வைத்து, மெதுவாக மூடி ஓரங்களை ஒட்டி மூடவும்.
- கையில் நெய்யைத் தடவி, அதை மீண்டும் மெதுவாகச் சிறிய பூரி போலத் தேய்க்கவும். இதேபோல மற்ற உருண்டைகளையும் பூரிகளாகத் தயார் செய்யவும்.
- ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், 2-3 பூரிகளை அதில் போடவும். தீயை மிதமான அளவில் வைத்து, பூரிகள் லேசான பழுப்பு நிறமாகும் வரை பொரிக்கவும்.
- பூரிகளைத் திருப்பிப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவிடவும். பூரிகளை எண்ணெயிலிருந்து எடுத்து, அதிகப்படியான எண்ணெய் வடிய ஒரு காகிதத் துண்டின் மீது வைக்கவும்.
- இதேபோல மீதமுள்ள பூரிகளையும் பொரித்தெடுக்கவும். அவ்வளவுதான் சூப்பரான சொஜ்ஜி அப்பம் ரெடி!



Click it and Unblock the Notifications
