Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
1 கப் அவலும், தேங்காயும் இருந்தா.. விநாயகர் சதுர்த்திக்கு இப்படி ட்ரை பண்ணிப் பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
Ganesh Chaturthi Special Aval Kozhukattai Recipe In Tamil: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்தி வரப்போகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி அன்று உங்கள் வீட்டில் விநாயகருக்கு மிகவும் பிடித்த பலவிதமான பலகாரங்களை செய்து படைத்து வழிபட தயாராகிவிட்டீர்களா? அதுவும் கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. உங்கள் படையலில் அப்படி பலவிதமான கொழுக்கட்டைகளை செய்ய விரும்புகிறீர்களா?
அப்படியானால் வழக்கமாக செய்யும் பூரண கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டையுடன், 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறான ஒரு அருமையான அவல் கொழுக்கட்டையையும் சேர்த்து செய்யுங்கள். இந்த அவல் கொழுக்கட்டைக்கு எந்த அரிசியையும் ஊற வைத்து அரைத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 1 கப் அவலும், 1/2 மூடி தேங்காயும் இருந்தால், அட்டகாசமான சுவையில் கொழுக்கட்டையை செய்யலாம்.

உங்களுக்கு அவல் கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* தேங்காய் - 1/2 மூடி
* வெல்லம் - 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் அவலை சேர்த்து, ரவை பதத்திற்கு
அரைத்து, ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரைத் தெளித்து, புட்டு மாவு பதத்திற்கு
பிசைந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு அதே மிக்சர் ஜாரில் 1/2 மூடி தேங்காயை சேர்த்து, கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் 1/2 கப் பொடித்த வெல்லத்தை சேர்த்து,
அதில் 1/4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைய வைக்க
வேண்டும்.
* வெல்லம் கரைந்து, சற்று பிசுபிசுப்பான பதத்திற்கு வந்ததும், அதை
இறக்க வேண்டும்.
* அதன் பின் ஊற வைத்துள்ள அவலை எடுத்து, கைகளால் ஒருமுறை கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் தேங்காயை சேர்த்து கைகளால் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சூடான வெல்ல நீரை வடிகட்டி சேர்த்து, கரண்டியால்
கிளறி விட்டு, மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து கைகளால் நன்கு பிசைந்து, பிடி கொழுக்கட்டை போன்று
பிடித்து, இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
* இறுதியாக அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 5-8
நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான அவல் கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications