Latest Updates
-
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பாசிப்பருப்பு மோதகம்
விநாயகருக்கு மோதகம் என்றால் ரொம்ப பிடிக்கும். வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு உங்கள் வீட்டில் உள்ள பிள்ளையாருக்கு மோதகம் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் பாசிப்பருப்பு மோதகம் செய்யுங்கள்.
விநாயகருக்கு மோதகம் என்றால் ரொம்ப பிடிக்கும். வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு உங்கள் வீட்டில் உள்ள பிள்ளையாருக்கு மோதகம் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் பாசிப்பருப்பு மோதகம் செய்யுங்கள். இந்த பாசிப்பருப்பு மோதகம் செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு பாசிப்பருப்பு மோதகம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு மோதகம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பூரணத்திற்கு...
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* வெல்லம் - 1/2 கப்
* ஏலக்காய் - 1
மாவிற்கு...
* பச்சரிசி மாவு - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் வறுத்த பாசிப்பருப்பை குக்கரில் போட்டு, 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு வேக வைத்த பாசிப்பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் வெல்லத்தை நீரில் போட்டு அடுப்பில் வைத்து, நன்கு கரைய விட்டு இறக்கி வடிகட்டி, மீண்டும் அந்த பாகுவை அடுப்பில் வைத்து நுரைகட்ட கொதிக்க விட வேண்டும்.
* பின் அதில் மசித்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கிளறி, அத்துடன் துருவிய தேங்காய், ஏலக்காய் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறி இறக்கினால், பூரணம் தயார்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு, அதில் நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும். பின் அதில் சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கரண்டியால் கிளறி சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
* சூடு ஆறியதும், கைறால் நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து பிசைந்த மாவை சரிசமமாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
* இப்போது தயாரித்து வைத்துள்ள பூரணத்தை சரிசமமாக பிரித்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு மாவு உருண்டையை எடுத்து கிண்ணம் போன்ற வடிவில் தட்டிக் கொண்டு, அதன் நடுவே ஒரு பூரண உருண்டையை வைத்து, மோதகம் போன்ற வடிவில் நன்கு மூடிக் கொள்ள வேண்டும்.
* இதேப் போன்று அனைத்து மாவையும் மோதகம் போன்று செய்து, இட்லி தட்டில் வைத்து, 5-8 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான பாசிப்பருப்பு மோதகம் தயார்.
Image Courtesy: rakskitchen



Click it and Unblock the Notifications
