Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
இனிமேல் மீன் முட்டையை தூக்கிப் போடாம.. இப்படி வறுவல் செய்யுங்க.. வீட்ல எல்லாரும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க
Fish Egg Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி மீன் வாங்குவீர்களா? சில சமயங்களில் மீன்களில் முட்டை இருக்குமா? அந்த மீன் முட்டைகளை பெரும்பாலும் தூக்கி எறிந்துவிடுவீர்களா? அப்படியானால் அடுத்தமுறை மீன் முட்டைகளை தூக்கி எறியாமல், அவற்றைக் கொண்டு வறுவல் செய்யுங்கள்.
இந்த மீன் முட்டை வறுவல் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு வாரத்திற்கு 2 முறை மீன் முட்டைகளை செய்து கொடுப்பது நல்லது. இப்படி மீன் முட்டைகளை வறுவல் செய்தால், பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மீன் முட்டை வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீன் முட்டை வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கழுவுவதற்கு...
* மீன் முட்டை - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
ஊற வைப்பதற்கு...
* மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை - 1
* உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பிற பொருட்கள்...
* மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 100 கிராம்
செய்முறை:
* முதலில் மீன் முட்டையை நீரில் 3-4 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் கழுவிய மீன் முட்டையில் நீரை ஊற்றி, அதில் 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து, மீன் முட்டையை மீண்டும் நீரில் 4-5 முறை கழுவ
வேண்டும்.
* அதன் பின் கழுவிய மீன் முட்டைகளை எடுத்து, அதன் மேல் மசாலா
இறங்குவதற்காக கீறல்களைப் போட வேண்டும்.
* பின் அந்த மீன் முட்டையில் 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1
எலுமிச்சையின் சாறு, 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும். இப்படி ஊற வைப்பதன் மூலம் முட்டையின் கவுச்சு நீங்கும்.
* 1/2 மணிநேரம் கழித்து, அத்துடன் 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்,
1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள், 1/2 டேபிள் ஸ்பூன் சீரகத் தூள், 1/4
டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து
பிரட்ட வேண்டும்.
* இறுதியாக ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 100 கிராம் எண்ணெய்
ஊற்றி சூடானதும், தீயைக் குறைத்து, பிரட்டி வைத்துள்ள மீன் முட்டைகளை
சேர்த்து, பிரட்டி விட்டு 5 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான
மீன் முட்டை வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications